உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் திருச்சியில் உலக தரத்தில் நுாலகம்

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் திருச்சியில் உலக தரத்தில் நுாலகம்

சென்னை:“ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்; திருச்சியில் கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:அனைத்து மாவட்டங்களிலும், தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம். மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தி துறையில், ஓசூர் கடந்த சில ஆண்டுகளில், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரை, தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க, அங்கு நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த, பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பெருந்திட்டம்

அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் நிலையில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளின் ஒட்டு மொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என, அரசு கருதுகிறது.எனவே, ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 லட்சம் பயணியரை கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவை கொண்டாடிய கருணாநிதி, சென்னை கோட்டூர்புரத்தில், எட்டு மாடிகள் உடைய, ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து படிக்கிற வகையில், 3.30 லட்சம் சதுர அடி நுாலகத்தை உருவாக்கினார். அதற்கு, 'அண்ணா நுாற்றாண்டு நுாலகம்' என்று பெயர் சூட்டினார்.

அறிவியல் மையம்

மதுரையில், 'கலைஞர் நுாற்றாண்டு நுாலகம்' அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோவை பொது மக்களுக்கும், இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக, ஒரு மாபெரும் நுாலகம் மற்றும் அறிவியல் மையம், கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடர்ச்சி 7ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூன் 28, 2024 04:24

ஊராட்சிக்கு ஒரு விமான நிலையமும், ஹார்பரும் அமைக்கப்படும் என்று அறிவிக்கலாமே? எப்படியோ கள்ளக்குறிச்சி பிரச்சினை திசை திருப்பியாச்சு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை