உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருத்தருக்கு எத்தனை மது பாட்டில் விற்கலாம்? : விதி உருவாக்க கோரிக்கை

ஒருத்தருக்கு எத்தனை மது பாட்டில் விற்கலாம்? : விதி உருவாக்க கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதை தடுக்க, ஒருவருக்கு எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வெளியிடுமாறு, டாஸ்மாக்கிற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது:மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், இரு பாட்டில் என வாங்குவர். மதுக்கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச் சொல்லி அனுப்புகின்றனர்.அவர்களும் ஒரு மேஜைக்கு இரண்டு, மூன்று பாட்டில் வீதம், 4 - 5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா என்பது, மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும் போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், 'எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது' என்று கேட்டால், ஊழியர்களை கைகாட்டி விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும். மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, 'ஆதார்' உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ravichandran S
ஜூன் 29, 2024 16:57

குடிக்காத குடிமகன்களிடம் இருந்து அடையாள சீட்டை எடுத்து வாங்குவர் இதனால் குடிப்பவர்கள் எண்ணிக்கை பெருகி திமுகவிற்கு வாக்கு பெறும்


subramanian
ஜூன் 29, 2024 15:16

அடச்சீ .பாரதம் புண்ணிய பூமி. அதிலும் தமிழ் நாடு உயர்ந்தது . தென்னாடுடைய சிவனே போற்றி . எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கொண்டாடுகிறோம். நீங்களெல்லாம் ஏண்டா தமிநாட்டு மானத்தை வாங்குகிறீர்கள்.


angbu ganesh
ஜூன் 29, 2024 12:09

டாஸ்மாக் விற்பனையாளருக்கும் நட்பு கூடாது, சில சமயம் பார்த்திருக்கிறேன், வண்டியில் இருந்து டாஸ்மாக் கடைக்கு போகாம DIRECTA பாருக்கு உள்ள போகுது சரக்கு, ஏன் டாஸ்மாக்கா மூட கூடாதுன்னு யோசிக்கல இத மாதிரி வெத்து யோசனைகள் தேவையா ARASEY


M Ramachandran
ஜூன் 29, 2024 10:55

ஒருத்தருக்கு எவ்வளவு பேரல் விக்கலாமென்று திட்டமிட வேண்டும்.


Namasivayam
ஜூன் 29, 2024 10:55

இப்போ இருக்கும் சூழ்நிலையில் குடிக்கிறதை யாரும் நிறுத்த மாட்டாங்க. அதே நேரம் பூரண மது விலக்கு, படி படியா மதுவிலக்கு எதுவும் சாத்தியம் இல்லை, அப்படி சாத்தியம் அன்று சொன்னால் அது மிகப்பெரிய பொய் தான் அல்லது பேராசை தான் என்று சொல்ல வேண்டும். அப்படிஇருக்க எப்படி இந்த பிரச்சினையை அணுகுவது எனபது பெரிய சவால் என்று நினைத்தால் அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அது. இதற்கு நல்ல ஒரு வழி இருக்கிறது, இது மட்டுமே வழி இல்லை இரு நல்ல வழியாக இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த ஒரு வழி. தமிழ் நாடு அரசு உடனடியாக குடிப்பவர்களுக்கு லைசென்ஸ் முறையை அமுல் படுத்தலாம். ஒரு லைசென்ஸ் 2 வருடம் செல்லுபடி ஆக வைத்துக்கொள்ளலாம், அதன் பின்பு ஒவ்வொரு 2 வருடத்திற்கும் அதை புதுப்பிக்கலாம், அதற்க்கு அரசு கட்டணம் கூட வசூலிக்கலாம். குடிப்பவர்கள் பெயரை அரசு வலைத்தளத்தில் குறிப்பிடவும் செய்யலாம். குடிப்பவர்களுக்கு ஒரு வரையறை வைத்து அதற்கு மேல் விற்பனை அவருக்கு அனுமதிக்க கூடாது. அரசு உயர் ரக மது பானங்களை மட்டும் அனுமதிக்காமல் மலிவு விலை கள் மற்றும் சாராயம் விற்பனை அறிமுகம் செய்து அதற்கும் வரைமுறை செய்தால் கள்ள சாராயமும் கட்டுப்படும். மது பான விற்பனை ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட லைசென்ஸ் மூலம் டெபிட் கார்டு போல கார்டு முறையில் அனுமதிக்க பட்டால் ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய குடியை நிர்வகிக்க முடியும் என்பது என்னுடைய தாழ்வான கருத்து.


M Ramachandran
ஜூன் 29, 2024 10:49

அப்பவும் கல்லா காட்ட வழி வகுங்க்ரங்க


Sampath Kumar
ஜூன் 29, 2024 10:16

அந்த விதி எல்லாம் காற்றில் பொய் விடும் டாஸ்மாக் கார்னே மொத்தமாக யாரு வாங்குங்க அவங்க நல்ல வில்லை கொடுத்து விற்று விடுவார் குடிமகன்களுக்கு சாரயம் தான் கிடைக்கும்


Namasivayam
ஜூன் 29, 2024 11:03

Since they need to achieve target, they prefer only bulk purchase


sankaranarayanan
ஜூன் 29, 2024 09:51

மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவது என்ற குணம் நம்மைவிட்டுப்போகவே போகாதே எதை எடுத்தாலும் பதுக்கி பதுக்கியே வாழந்து விட்டோம் இனியாவது மட்றவர்களுக்கும் அது பயன்படும் என்று நினைத்து அவரவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கேற்ப எந்த பொருள்களையம் வாங்கிச்சென்றால் அடுத்தவனும் வாழலாம்


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 07:57

விற்கப்படும் பாட்டில்களை சோதித்தால் எத்தனை ஒரிஜினல் எத்தனை வரி செலுத்தாமல் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது என்பது தெரியவரும். அதன் பின்னர் யார் வாங்குகிறார்கள் என்று ஆதார் எண் வாங்கி அதை மத்திய அரசுக்கு அனுப்பி அதிக குடிகாரர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் கொண்டுவரலாம்.


Ravichandran S
ஜூன் 29, 2024 17:00

வருமானம் தமிழ்நாட்டிற்கு திருந்துவதற்கு மத்திய அரசு பரவாயில்லை


chennai sivakumar
ஜூன் 29, 2024 07:18

ஆதார் கார்டு அடிப்படையில் விற்கலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை