உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எப்படி: சி.பி.சி.ஐ.டி., தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எப்படி: சி.பி.சி.ஐ.டி., தகவல்

மதுரை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி எந்தெந்த வகையில் நடந்தது என சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமை சில ஆவணங்களை தர மறுப்பதாகவும் தெரிவித்தது.சென்னை தண்டையார்பேட்டை உதித்சூர்யா. இவர் 2019 ல் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர்ந்ததாக கண்டமனுார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர். படிப்பை தொடர விருப்பமின்றி, விலகிக் கொள்வதாக கல்லுாரிக்கு உதித்சூர்யா கடிதம் அளித்தார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கராக செயல்பட்ட சென்னை கீழ்பாக்கம் தருண்மோகன் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.சி.பி.சி.ஐ.டி., தரப்பு: நீட் தேர்வு நடந்த தேதியில்உதித்சூர்யா சென்னையிலும், அவரது பெயரில் மும்பையில் வேறொருவரும் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் எழுதியஉதித் சூர்யா 135 மதிப்பெண், அவருக்காக மும்பையில் எழுதியவர் 385 மதிப்பெண் பெற்றுஉள்ளனர். மும்பையில் எழுதியவரின் மதிப்பெண் அடிப்படையில் உதித் சூர்யா தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்துஉள்ளார்.திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ரான் என்ற மாணவருக்காக ஜார்கண்ட், உ.பி.,ராஜஸ்தானில் சிலர் 2019 மே5 ல் தேர்வு எழுதியுள்ளனர். அப்போது முகமது இப்ரான் மொரிஷியசில் இருந்துள்ளார். இத்தேர்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவு, தேர்வில் பங்கேற்றோரின் கைரேகை பதிவு, ஆதார் விபரங்களை தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.,) கோரினோம். தர மறுக்கிறது. தந்தால்தான் முறைகேட்டில்யார், யாருக்கு எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பது தெரியவரும்.இவ்வாறு தெரிவித்தது. என்.டி.ஏ.,சார்பில் அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி ஜூலை 16க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Swaminathan L
ஜூலை 11, 2024 12:21

நீட் மேட்டர்ல நீட்டா நடக்குதா ஆயிரம் மோசடி? இந்த என்டிஏவால ஆளும் என்டிஏ தலை குனிய வேண்டியிருக்கு.


Sankaran Natarajan
ஜூலை 15, 2024 21:37

இந்த கேஸ் 2019ல் நடந்த ஆள்மாறாட்ட மோசடி சம்மந்தப்பட்டது.


venugopal s
ஜூலை 11, 2024 12:00

போட்டித் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்வதில் வடக்கன்கள் விற்பன்னர்கள்! எல்லாம் பாஜகவினரின் டிரைனிங் தான்!


R Hariharan
ஜூலை 11, 2024 11:59

கரெக்ட். உள்குத்து இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. ஆதார் கார்டு போட்டோ போன்ற வழிகள் இருக்குபோது ஏமாற்ற வழியில்லை. இது ஒரு ஒயர் மட்ட மோசடி. அரசாங்கம் சரியாக கையாள வேண்டும். எந்த குற்றம் நடந்தாலும் உள்குத்து இல்லாமல் நடக்க vaipillai.


ஆரூர் ரங்
ஜூலை 11, 2024 11:21

தமிழன் ( இருவருமே)


கனோஜ் ஆங்ரே
ஜூலை 11, 2024 11:47

போனமாசம் குஜராத், ஹரியானா ஆள்மாறாட்டம் செஞ்சவனுங்க... சென்டரையே மாத்தி போட்டவனுங்க தமிழனுங்களா...? இல்ல... காட்டுமிராண்டி இந்திக்காரங்களா...?


karthikeyan.P
ஜூலை 11, 2024 11:05

நீட் தேர்வு நம்பகத்தண்மையே தகர்த்திடும் போலிருக்கு,இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்


rsudarsan lic
ஜூலை 11, 2024 09:59

வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் முடிந்தது. ஆவணங்கள் கொடுக்க கோரி உயர்நீதி மன்றம் ஆணையிட முடியுமா? லான்ஹம் வாங்கிய எட் அதிகாரி கேஸ் என்ன ஆயிற்று? ஒரே கேள்வி- என்ன விளையாடறீங்களா?


VENKATASUBRAMANIAN
ஜூலை 11, 2024 08:28

இதில் ஏதோ சதி உள்ளது.


பல்லவி
ஜூலை 11, 2024 08:25

Question paper leak is a fault of examination authorities


visu
ஜூலை 11, 2024 07:40

385 மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததா ? என்ன ஆச்சர்யம்


visu
ஜூலை 11, 2024 07:39

விவரங்கள் தரவில்லை என்று 2019 வழக்கிற்கு 2024 இல் கோர்ட்டில் தெரிவிக்கிறார்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ