உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !

கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !

ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட் எடுப்பது, பெரிய சிரமமாக இருக்கிறது; ஊழியர்கள் எல்லோரும் ஹிந்தியில் பேசுவதாக, எம்.பி., கனிமொழி கூறியிருக்கிறார். இதுவரை எந்த பயணியும் இது குறித்து சொன்னதில்லையே...சரி, என்ன தான் நிஜ கள நிலவரம்? கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்த பயணிகள் சிலரிடம் பேசினோம். இதில், எம்.பி., கனிமொழியின் குற்றச்சாட்டு, 'சும்மா லுாலுாலுா' என்பது நிரூபணம் ஆனது!

தமிழில் கேட்டு பெற்றோம்

மேல்மருவத்துார் கோவிலுக்கு போகிறோம். ஸ்டேஷனில் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழியிலும் அறிவிப்பு இருக்கிறது. பார்த்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. ஏதாவது சந்தேகம் இருந்தால், தகவல் மையத்தில் கேட்டால் சரியாக சொல்கிறார்கள். தமிழில்தான் டிக்கெட் கேட்டோம். விவரங்களை கேட்டார்கள். சொன்னவுடன் டிக்கெட் கொடுத்து விட்டார்கள்.- உமா மகேஸ்வரி, வாளையார்

'டிக்கெட் எடுப்பது ஈசி'

டிக்கெட் எடுக்க வந்தோம். தானியங்கி இயந்திரத்தில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. அதிலும், உதவிக்கு ஊழியர்கள் உள்ளனர். அவர்களிடம் தகவலையும், பணத்தையும் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டோம். கவுன்டரில் கூட்டம் இருந்தால், தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தி, ஈஸியாக டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும்.- உஷா, திருச்சி

'ஊருக்கு மொழியில்லை'

எனது மனைவியுடன் கோவை வந்தேன். எனக்கு ஹிந்தி கொஞ்சம் பேச தெரியும். டிக்கெட் கேட்டு வாங்கி விட்டேன். உள்ளே தமிழ் பேசும் அலுவலரும் இருக்கிறார். ஹிந்தியில் பேசும் அலுவலரும் இருக்கிறார். ஊர் பெயரை எந்த மொழியில் சொன்னாலும் ஒன்றுதான். நான் ஜோலார்பேட்டைக்கு டிக்கெட் கேட்டேன் கொடுத்தார்கள். சிரமம் எதும் இல்லை.- பிரகாஷ், ஜோலார்பேட்டை

'மெஷின் தந்த டிக்கெட்'

சேலம் செல்ல டிக்கெட் எடுக்க வந்தேன். கவுன்டரில் ஆறு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அதனால், 'ஆட்டோமெடிக் டிக்கெட் வெண்டிங் மெஷினில்' தகவலை பதிவு செய்து, என்னுடைய மொபைல் போனில், 'ஸ்கேன்' செய்து கட்டணம் செலுத்தியதும், டிக்கெட் வந்து விட்டது. கவுன்டருக்கே போகாமல் டிக்கெட் எடுப்பது ரொம்ப 'சிம்பிள்' ஆகி விட்டது.- வசந்த், கோவை'

எந்த சிரமமும் இல்லை'

சகோதரியை பார்க்க கோவை வந்திருக்கிறேன். காரமடை செல்ல வேண்டும். அதற்கு டிக்கெட் எடுக்க வந்தேன். கவுன்டர் கொஞ்சம் உள்ளே இருப்பதால், அவசரமாக வந்து டிக்கெட் எடுப்பதில் சின்ன சிரமம் இருக்கிறது. அது தவிர, டிக்கெட் எடுப்பதில் எல்லாம் எந்த சிரமமும் இல்லை. டிக்கெட் எடுக்க நிற்கும் நேரத்தை விட, நடந்து வந்து செல்லும் நேரம் தான் அதிகம்.- கணேஷ் பாபு, வேலுார்.'

மெஷினிலும் டிக்கெட்'

எந்த சிரமமும், கஷ்டமும் இல்லாமல் டிக்கெட் எடுக்க முடிகிறது. கூட்டமும் பெரியதாக இல்லை. கவுன்டரில் கூட்டமாக இருந்தால், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்திக்கூட சுலபமாக டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். 10 ஆண்டுக்கு முன்னர் எல்லாம் பெரிய வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் இருந்தது.- ஜென்சி, கோவை

'மொழி பிரச்னை இல்லை'

கவுன்டரில் இருக்கிறவர்கள் நன்கு 'ரெஸ்பான்ஸ்' செய்கிறார்கள். மொழி பிரச்னை எல்லாம் எதுவும் இல்லை. தமிழ் தெரிந்தவர்தான் எனக்கு டிக்கெட் வழங்கினார். நான் திருச்சி செல்கிறேன். டிக்கெட் எடுத்து விட்டேன். ரயிலுக்காக 'வெயிட்' பண்ணிக்கொண்டிருக்கிறேன்.- எப்சி, கோவை'

தமிழில்தான் பேசினார்'

நான் மொரப்பூர் செல்ல டிக்கெட் எடுக்க வந்தேன். ஹிந்தி பேசும் அலுவலர் தான் உள்ளே இருந்தார். ஆனால் அவர், நான் சொல்வதை புரிந்துகொண்டு, சரியானடிக்கெட்டையும் அளித்தார். எந்த பிரச்னையும் இல்லை. ஈஸியாகதான் இருக்கிறது.- மதியழகன், கோவை'

தமிழ் தெரிந்தவர்கள்'

சேலம் செல்ல கவுன்டரில் விசாரித்து டிக்கெட் எடுத்தேன். எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். கவுன்டரிலும் தமிழ் தெரிந்தவர்கள் உள்ளனர். அவர்களிடம் சொன்னதும் டிக்கெட் கொடுத்து, பிளாட்பார்ம் எண்ணையும் தெரிவித்தார்கள். இது போல் பல ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பெற்றுள்ளேன். இதுவரை எந்த பிரச்னையும் கிடையாது.- ராமசந்திரன், சேலம்.'

கேட்டேன்; தந்தார்கள்'

சேலத்திற்கு செல்ல ரயில்நிலைய டிக்கெட் கவுன்டரில் தான், 'ஓபன்' டிக்கெட் எடுத்தேன். 'சேலத்திற்கு ரெண்டு டிக்கெட் தாங்க' என்று சொன்னேன்; கொடுத்தார்கள். அவ்வளவுதான். இதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால், வேலை நடக்கிறது. அது போதுமே.- திவாகர், சேலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 94 )

C.SRIRAM
செப் 03, 2024 16:09

பொய் சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் இந்த புளுகு எம்பீயை


Subramanian Iyer
செப் 01, 2024 08:40

கனிமொழி ஏப்போத இப்படித்தான்


Godfather_Senior
ஆக 21, 2024 18:31

அது டிக்கெட் எடுத்த பரம்பரையில் வரலியே ? பொய் சொல்லுவதில் 'தான்' கருணாநிதியின் மகள் என்று நிரூபித்துவிட்டார்


MADHAVAN
ஆக 16, 2024 11:02

இந்த பத்துபேர் மட்டும் பிஜேபி உ ஒட்டு போட்ட போதுமா ?


Sainathan Veeraraghavan
ஆக 12, 2024 15:58

கனிமொழி அவர்கள் சொல்வதெல்லாம் பொய்கள். தேர்தலுக்கு முன் டாஸ்மாக்கினால் பல இளம் பெண்கள் விதவைகளாக ஆகி உள்ளதாகவும், திமுக ஆட்சியில் வந்தவுடன் டாஸ்மாக் கடைகளை இழுத்துமூடுவோமென்றார். இப்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் சரக்கை தவிர, கஞ்சா, COCAIN, FENTANYL , கள்ளச்சாராயம் எல்லாமே திமுக ஆட்சியில் வெள்ளமாக கிடைக்கிறது. வாயில் வடைசுடுவதில் திமுகவினரை யாரும் மிஞ்ச முடியாது. தமிழக மக்களுக்குஇது நன்றாக வேண்டும். அவதிப்பட்டால் ஆவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.


DR Sanaathan Rakshak Sanga Nadar
ஆக 09, 2024 21:54

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அம்மா


DR Sanaathan Rakshak Sanga Nadar
ஆக 09, 2024 21:42

கனிமொழி பெயரில் தான் கனி . வாயில் பொய் . இவர் பெயர் பொய்மொழி


தஞ்சை மன்னர்
ஆக 09, 2024 21:00

ஆர் எஸ் எஸ் கும்பலால் பாதிக்கபட்டர்வகள் இப்படித்தான் சொல்லுவார்கள் காரைக்குடி பட்டுக்கோட்டை,பேராவூரணி புதுக்கோட்டை பக்கம் உள்ள ஸ்டேஷன் பக்கம் வந்து பார்த்து சொல்லவும் கிராமிய மக்கள் படும் பாடு தெரியும்


Nagarajan S
ஆக 08, 2024 18:32

திமுக எம்பி ஆகா இருந்துகொண்டு விமானத்திலும் ரயிலிலும் ஓசி பயணம் செய்யும் இவருக்கு ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர் பற்றி என்ன தெரியும் ? என்றாவது இவர் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் நின்று டிக்கெட் எடுத்திருக்கிறாரா? இவர் குடும்பத்தில் உள்ள முக்கால் வாசிப்பேருக்கு ஹிந்தி தெரியும். தொடர்ந்து 15 வருடத்திற்கும் மேல் டெல்லியில் எம்பியாக இருக்கும் இவருக்கே கூட ஹிந்தி தெரிந்திருக்கலாம். ஆனால் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்தி தெரியாதது போலவும் ஹிந்தியை எதிர்ப்பதாக நடிக்கிறார்கள்.


tmranganathan
ஆக 08, 2024 08:25

கனிமொழி அதையே கேளுங்கள். அவர் 3000 கோடி திர்ஹம் dubayil irukku. adhai neengal sollum design padi iyndhu natchathiram ஹோட்டல் கட்டி கொடுக்கிறேன். உங்களுக்கு 50 லக்ஷம் மேனேஜ்மென்ட் பீஸ் வருடத்திற்கு தருகிறேன் என ஒரு சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கொம்பனியிடம் கேட்டார். இந்த ஊழல் பெண்மணிக்கு எங்கேந்து 3000 கோடி அந்நிய செலவாணி கிடைத்ததுன்னு அவங்க கேட்ட பொது நடுங்கினார். இந்தியா அரசிடம் செர்டிபிகாடே வாங்கி தரனுனு சொல்லி விட்டார்கள். உலகமகா ஊழல்காரி ...


மேலும் செய்திகள்