உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் வேலை நாள் அதிகரிப்பு: காலாண்டு விடுமுறை குறைப்பு

ஆசிரியர் வேலை நாள் அதிகரிப்பு: காலாண்டு விடுமுறை குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களின் வேலை நாட்கள், 217ல் இருந்து, 220 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை, நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.புதிய கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணையை, பள்ளி கல்வி இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு, 217 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் அதிகரித்து, 220 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.காலாண்டு தேர்வு விடுமுறை கடந்த ஆண்டு, ஏழு நாட்களாக இருந்தது. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு தேதி இல்லை

 கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

2024 - 2025 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வு அட்டவணை விபரம்:

நிகழ்வு தேதிபுதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10முதலாம் பருவ காலாண்டு தேர்வு துவக்கம் செப்., 20காலாண்டு தேர்வு நிறைவு செப்., 28காலாண்டு விடுமுறை துவக்கம் செப்., 29இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு அக்., 3அரையாண்டு தேர்வு துவக்கம் டிச., 16அரையாண்டு தேர்வு நிறைவு டிச., 23அரையாண்டு தேர்வு விடுமுறை துவக்கம் டிச., 24மூன்றாம் பருவம் பள்ளிகள் திறப்பு 2025 ஜன., 2ஆண்டு இறுதி தேர்வு துவக்கம் ஏப்., 9ஆண்டு இறுதி தேர்வு நிறைவு ஏப்., 17மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் ஏப்., 18ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி துவக்கம் ஏப்., 21ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் ஏப்., 28

பொதுத்தேர்வு

தேதி இல்லை கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ்வேள்
ஜூன் 10, 2024 10:53

மற்ற அரசு ஊழியர்களுக்கு அவ்வளவாக விடுமுறை இல்லாத பொது வாத்தியாருக்கு மட்டும் ஏன் மேலதிக விடுமுறைகள்? சம்பளத்தை குறைப்பது நல்லது. விடுமுறைகள் தேவையில்லை. திராவிட அடிமை தனத்துக்கு தற்போது உள்ள சம்பளம் மிக அதிகம்


Svs Yaadum oore
ஜூன் 10, 2024 10:02

பள்ளி இறுதி தேர்வு முடிவில் வருடா வருடம் சில மாணவர் தற்கொலை நடக்குது. நீட் எதிர்ப்பு போராளியான தூத்துக்குடி அக்கா பள்ளி இறுதி தேர்வை ஒழிக்க பாடு பட வேண்டும். சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மையாக பள்ளி இறுதித்தேர்வில் அணைத்து மாணவரும் நூற்றுக்கு நூறு மார்க் என்று அறிவித்து விடியல் அரசு பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் ...


Kasimani Baskaran
ஜூன் 10, 2024 06:58

உலகில் சிறந்த கல்விமுறை மாடல் ஆட்சியில்த்தான் என்று உருட்டவில்லை என்பது நெருடலான விஷயம்.


Svs Yaadum oore
ஜூன் 10, 2024 06:54

ஆசிரியர்கள் என்றால் இளித்தவாயர்களா? பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியருக்கு அமல்படுத்த விடியல் கொடுத்த வாக்குறுதி காற்றோடு பறந்தது போனது. ராமசாமி திராவிட பாடத்திட்டத்தை வைத்து பாடம் நடத்த காலை 9:00 மணிக்கு ஏன் பள்ளி துவங்க வேண்டும்? காலை 10.00 மணிக்கு துவங்கினால் வேண்டாம் என்பாரா. இதில் பள்ளி தேர்வாம் ....97 சதம் பாஸ் மார்க் அளிக்க எதுக்கு தேர்வு? சமூக நீதி அடிப்படையில் திராவிட சமத்துவம் மத சார்பின்மையாக அனைவரும் பாஸ் என்று அறிவித்தால் விடியலுக்கு தேஞ்சு போகுமா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ