உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம்: இ.பி.எஸ்., பேட்டி

தி.மு.க.,வுக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம்: இ.பி.எஸ்., பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: தி.மு.க.,வுக்கு ஆட்சி அதிகாரமும், இண்டியா கூட்டணியும் தான் முக்கியம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணபலம், அதிகார பலத்தால் தி.மு.க., வென்றுள்ளது. விவசாயிகள், தமிழக மக்களை பற்றி தி.மு.க.,வுக்கு அக்கறையில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல வேண்டிய அவசரம் என்ன?. ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சந்தேகம் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0ei1un3s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆட்சி அதிகாரம்

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது தி.மு.க.,வுக்கே கவலையே இல்லை. கூட்டணி தான் முக்கியம் என்பதற்காக காவிரி நீர் பெறுவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை. கர்நாடக அரசு உரிய நீரை வழங்க வேண்டும். தி.மு.க.,வுக்கு ஆட்சி அதிகாரமும், இண்டியா கூட்டணியும் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ramamurthy N
ஜூலை 14, 2024 22:41

இவருடைய ஆட்சி நடைபெற்றபோது கர்நாடகாவில் பாஜக ஆண்டு இருந்தபோது எவ்வளவு தண்ணீர் கிடைத்தது. கர்நாடக ஆட்சியாளர்கள் அவர்களுக்கு போக மீதி இருந்தால் மட்டுமே சாக்கடையில் திறப்பது போல விடுவார்கள். இதில் எந்த கட்சியுமே ஒழுங்கு கிடையாது


karutthu
ஜூலை 14, 2024 21:41

எடப்பாடி பழனிசாமி தேர்தலில் ஒன்றிணந்தால் மட்டுமே ஆ தி மு க 2026 ல் ஆட்சி யை பிடிக்கமுடியும் இல்லாவிட்டால்கட்சி யை களைத்துத்து தி மு க அல்லது பி ஜெ பீ யுடன் இணையவேண்டியது தான் முதலில் ஈ கோ பார்க்காமல் ஆ தி மு க உடன் இணைய பாருங்கள் 2026 ல் ஆட்சி யை பிடிக்க பாருங்கள்


Kadaparai Mani
ஜூலை 14, 2024 15:32

எடப்பாடி மிக பெரிய கூட்டணி 2026ஆம் ஆண்டு அமைப்பார் .கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்று பழனிசாமி முதல்வர் ஆவார்


V RAMASWAMY
ஜூலை 14, 2024 20:01

ஆமாம், இவர்கள் சுண்டெலி, கரப்பான் பூச்சி, கொசு போன்ற கட்சிகளிடம் கூட்டணி வைப்பார்கள். , அவர்கள் பெருச்சளி போன்ற கட்சிகளிடம் கூட்டணி வைப்பார்கள். இனம் இனத்தோடு சாயும்.


Rajah
ஜூலை 14, 2024 14:55

தி.மு.க.,வுக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம்: தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ஆகவே அதிமுகவை ஒன்றிணைத்து பாஜகவோடு கூட்டணி வைத்து 2026 இல் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த சிறுபான்மை வாக்குவங்கி, சமூகநீதி என்று பூச்சாண்டி காட்டுவார்கள். இவற்றை பொருட்படுத்த வேண்டாம். உங்களை வழி நடத்துபவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். வெற்றி நிச்சயம். ஒன்றிணைந்த அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஏனைய சிறிய கட்சிகளும் சேர்ந்தால் உங்களை அசைக்க முடியாது. ஒருபோதும் காங்கிரெஸ்,கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்க்கவேண்டாம். உண்மையான நடைமுறை சமூகநீதிக்கு அவர்கள் எதிரானவர்கள்.


S.L.Narasimman
ஜூலை 15, 2024 12:04

இதுக்கு முதலில் அண்ணாமலை ஒத்துகொள்ளனுமே. அவர் தனியாவே சாதிச்சுர சபலத்திலே இருக்காரு.


GMM
ஜூலை 14, 2024 13:05

தொண்டர்கள் இன்னும் MGR, ஜெயா போல் ஆட்சி அமைக்க முடியும் என்று நம்பி கட்சியில் உள்ளனர். ஆனால், எடப்பாடி வலுவான கூட்டணி அமைக்காமல், ஏமாற்றிவிட்டார். விக்கிரவாண்டி அண்ணா திமுக வாக்கு திமுகவிற்கு அதிகம் சென்றுள்ளது. எடப்பாடி முன்னாள் முதல்வர் பதவி நிலைக்க பிஜேபி உதவியது. விக்கிரவாண்டியில் பிஜேபி நின்று இருக்க வேண்டும். ராமதாஸ், திருமா போன்றோர் சாதி கட்சி என்ற பட்டம் பெற்று விட்டனர். பன்னீர், சசி சாதி ஆதரவு குழு தான். இவர்கள் கூட்டணியின் கீழ் தான் இனி தொடர முடியும். திமுக தன் கீழ் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியை கொண்டு வந்து வெற்றி பெறுகிறது கூட்டணி அமைகவில்லை என்றால், அண்ணா திமுக காணாமல் போகும். EVM பற்றி எந்த புலம்பலும் இல்லை.


SUBBU,MADURAI
ஜூலை 14, 2024 12:55

அதிமுக தோற்று விடுமோ என்று பயந்து தொடை நடுங்கி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடி என்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அத் தேர்தலை புறக்கணித்தாரோ அப்போதே அவர் அந்த தேர்தல் ரிசல்ட்டை பற்றி பேச தகுதியற்றவர் ஆகி விட்டார். இனிமேலும் பங்காளி கட்சியை எடப்பாடி போலியாக விமர்சிப்பதை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதுதான் முதல் வேலை என்று சொன்ன விடியல் முதல்வர் ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்த புதிதில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி ஆவனங்களை அள்ளியதோடு சரி அவ்வளவுதான் அத்தோடு அந்த வழக்குகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்தான் பெயருக்கு அவ்வப்போது பங்காளி கட்சியினர் ஆட்டம் போடும் போது அவர்களை மிரட்டுவதற்கு மட்டும் அந்த வழக்கு தூசி தட்டி எடுக்கப் பட்டு மீண்டும் பரணில் போட்டு விடுவார்கள். இதையெல்லாம் தமிழக மக்கள் நன்கு தெரிந்திருந்தும் மாறி மாறி அவர்களுக்குதான் தங்கள் ஓட்டுகளை போடுவார்கள்


வைகுண்டேஸ்வரன்
ஜூலை 14, 2024 12:50

தப்பி ஓட முயன்ற கொலைகாரனை சுடாமல், அவன் போறதுக்கு ஆட்டோ புடிச்சி குடுப்பாங்களா? ஒருவேளை காரையே குடுத்திருப்பாங்க. தூத்துக்குடியில் சும்மா ஊர்வலம் போன 13 பேரை, உன்னோட எஜமான் பிஜேபி, சுட்டுக்கொல்ல சொன்ன போது, அவசியம் என்ன என்று ஏன் கேக்கல??


Kannan
ஜூலை 14, 2024 13:39

தூத்துக்குடியில் இன்னும் 100 சுட்டுஇருக்கணும் உன்னையும் சேர்த்து கருத்து கந்தசாமின்னு நினைப்பு


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 14:30

சுட உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு இப்போ ஸ்டாலின் ஆட்சி பதவியுயர்வு அளித்தது ஏன்? பங்காளி கழகம் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்


Shekar
ஜூலை 14, 2024 12:16

இவருக்கு பதவிதான் முக்கியம், கட்சி நாசமாய்ப்போனாலும் கவலை இல்லை. அடுத்த தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி ஆட்சியில் சின்னவர் உதயண்ணா முதல்வர், புரட்சி தமிழர் எடப்பாடியார் துணை முதல்வர்.


saravan
ஜூலை 14, 2024 11:51

எடப்பாடி நீங்க தேர்தல்ல போட்டியிடவில்லை பயம் இதுக்கா குறைகள் வேறு டம்மி pcs எடப்பாடி


rao
ஜூலை 14, 2024 11:25

To be in power, at least DMK party has taken a decision to align with friendly parties but were as in your case because of your adamant attitude none of the parties are ready to align.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ