உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி நுாற்றாண்டு நினைவு ஆக.,18ல் 100 ரூபாய் நாணயம் வெளியீடு

கருணாநிதி நுாற்றாண்டு நினைவு ஆக.,18ல் 100 ரூபாய் நாணயம் வெளியீடு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, வரும் 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயமாக, கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.நாணயம் வெளியீட்டு விழா, வரும் 18ம் தேதி மாலை 6:50 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது. விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட உள்ளார். விழாவில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, அனைத்து கட்சி தலைவர்களுக்கும், திரையுலக பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.கருணாநிதி நுாற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தின் ஒரு புறம், இந்திய அரசின் சின்னம், மறுபுறம் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி படத்தின் கீழ், 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 'கலைஞர் கருணாநிதி நுாற்றாண்டு 1924 - 2024' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Anbuselvan
ஆக 20, 2024 15:11

ஒரு சந்தேகம். இம்மாதிரியான ரூபாய் நூறு நாணயங்கள் புழக்கத்தில் ஒப்பு கொள்கிறார்களா அல்லது வெறும் நினவிற்காக மற்றும் சாதனைக்காக மட்டும்தானா? இந்த சந்தேகத்தில் எந்த ஒரு உள்நூக்கமும் இல்லை.


Narayanan
ஆக 20, 2024 12:58

இந்த கருணாநிதி 100 ரூபாய் காசை 10000 ரூபிக்கு விற்று காசு பார்க்கும் யோகியர் கூட்டம் . இலவசமாக கொடுத்திருக்க வேண்டும் .


Dv Nanru
ஆக 20, 2024 11:00

நூற்றாண்டு நாணயம் தேவையா ....???


spr
ஆக 19, 2024 12:08

இந்த நாணயத்துக்கு என்னென்ன அவமதிப்பு இருக்குமோ


Dharmavaan
ஆக 18, 2024 07:36

இந்த ஊழல் மன்னனுக்கு அநாகரிகப்பேச்சாளனுக்கு காலம் பூராவும் நினைவாக இருக்க நாணயம் வெளியிட அனுமதி கொடுத்த மத்திய அரசின் கேவலம்


கீரன் கோவை
ஆக 20, 2024 02:48

மாநில அரசு கோரினால் மத்திய அரசு மறுக்க முடியாது. ஜெயலலிதாவுக்கு அதிமுக கோரினாலும் இதே போல நாணயம் வெளியிடப்படும்.


Prakash king
ஆக 18, 2024 00:27

பிரகாஷ்


Adhi Rangan
ஆக 17, 2024 12:38

போடா


baskaran A.C
ஆக 15, 2024 11:06

ஹிந்தியில் கட்டுமரம் என்று பொறித்து இருக்கலாம்


baskaran A.C
ஆக 15, 2024 11:03

இந்த நாணயத்தை மற்ற ரூபாய்களுடன் வைக்க கூடாது மொத்தமாக காணாமல் போய்விடும்


Natarajan Ramanathan
ஆக 15, 2024 10:40

வான்கோழி என்று எழுதி உள்ளதே... பரவாயில்லையா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ