| ADDED : ஜூலை 03, 2024 10:42 PM
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், ஆண்டுதோறும், 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதை வெளியிட, 1 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திலும் பெறலாம். மேலும், tn.gov.in/forms என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி நாள்._____________சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில், நடப்பு ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், கணினி பயன்பாடு, முதுநிலை டிப்ளமா படிப்பு, முதுநிலை வணிக நிர்வாகவியல் ஆகியவற்றுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர், நாளை முதல் பல்கலையில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், www.online.ideunom.ac.inஎன்ற இணையவழியிலும் விண்ணபிக்கலாம்.