உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை: அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

மத்திய திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை: அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: “தமிழகத்துக்கு, மத்திய அரசு பல திட்டங்களை வழங்கிய போதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது,” என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.கோவையில், அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பேட்டி:வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயிகள் நலன், மகளிர் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என, ஒன்பது முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதால், அது சார்ந்த தொழில் மேம்படும். பட்ஜெட்டில், சிறு, குறு தொழில்கள் நிறைந்த கோவை போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், 'பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை; தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது' என கூறுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு மத்திய அரசு பல திட்டங்களை வழங்கியபோதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பொய் குற்றச்சாட்டு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்ற, எட்டு மாத காலத்திற்கு பின் உத்தரவிடுகிறது. இத்தகைய பொறுப்பற்ற செயலால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது, அரசியல் சார்ந்த கருத்து. தமிழகம் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை.சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு மட்டுமே 100 சதவீத நிதி ஒதுக்க வேண்டும் என்பது போல பொய்யான குற்றச்சாட்டை, தமிழக முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sundaran manogaran
ஜூலை 29, 2024 16:57

உண்மை.கிசான் சம்மான் திட்டம் விவசாயிகளுக்கு முழுமையாக சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுபோல் தான்


ES
ஜூலை 29, 2024 12:53

Says the biggest liars. Infact every one in india same state too


Apposthalan samlin
ஜூலை 29, 2024 10:11

எய்ம்ம்ஸ இன்னும் ஆரமிக்கவில்லை மத்திய அரசு வாய் மட்டும் பேசும் ஸ்டிக்கர் ஓசியில் தருகிறார்களா ? ஒரு ரூபாய் பிடித்து 27 பைசா மட்டும் திருப்பி கொடுத்து ஸ்டிக்கர் பேச்சு வேற .மத்திய அரசு தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது .gst கொள்ளை நடக்கிறது .


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:50

எய்ம்ஸ் திட்டம் துவக்கப்பட்ட இந்த ஏழாண்டு இடைவெளியில் மத்திய நிதியில் 12 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. அதற்கு நன்றி கூற மனமில்லை. தி.மு.க ஆட்கள் நடத்தும் சுமார் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசுடைமை ஆக்க வேண்டும். அப்போ எய்ம்ஸ் தேவைப்படாது.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 29, 2024 09:29

திருட்டு தீயமுக எந்தவிதமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது. அவர்கள் கொண்டுவரும் சொற்ப திட்டங்களும் தாங்கள் மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்கி ஜெயிக்க வேண்டும் என்பதற்க்காக மட்டுமே இருக்கும். இது புரியாத தமிழக மக்கள் சமத்துவம், சமூக நீதி என்று அவர்கள் சொல்லுகிற கதைகளை கேட்டு கொள்ளையர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதையே காரணமாக பிடித்துக்கொண்டு நாடகம் நடத்துகிறது பிஜேபி. பிறகு எப்படி உருப்படும் தமிழ்நாடு?


Mario
ஜூலை 29, 2024 08:58

இவருக்கு மதுரை எய்ம்ஸ்ல் பரிசோதிக்க வேண்டும்


xyzabc
ஜூலை 29, 2024 08:55

சார், தி மு க வினர்க்கு ஸ்டிக்கர் மாத்திரமே தேவை. எதற்கு கஷ்டம் .கையில் ஓட்டுகள் இருக்கு.


அப்புசாமி
ஜூலை 29, 2024 08:07

இவிங்க செயல்படுத்தினா அவிங்க மெடல் குத்திப்பாங்க. அதுதான் பிரச்சனையே


Pandi Muni
ஜூலை 29, 2024 07:17

சுருட்ட ஒரு வழி இல்லையே திராவிட கும்பல் தவிக்கிறதே


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
ஜூலை 29, 2024 07:01

மத்திய அரசு திட்டங்களை முறைப்படி கொண்டு சென்றால் பா.ஜா.க தமிழ்நாட்டில் காலூன்றி விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாமல் வீணாகிப் போகின்றன என்பதற்கு மாற்று கருத்து இல்லை.இன்னும் சொல்லப் போனால் இந்த மாதிரி பயனுள்ள திட்டங்கள் மக்களுக்கு இருப்பதே தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள் உதாரணமாக நவோதயா கல்வித்திட்டம் மக்கள் மருந்தகம் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியரின் நலன் கருதி தகுதி உள்ளவர்களுக்கும் கிடைக்கும் வகையில் உள்ள பலத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன அப்படியே செயல்படுத்தபபட்டாலும் அது மிக மிக குறைந்த அளவில் கண் துடைப்பு நாட்களாகவே முடிந்து விடுகின்ற அவலமும் நடைபெறுகிறது


Ray
ஜூலை 29, 2024 06:25

குறிப்பிட்டு சொல்ல பட்ஜெட்டில் ஏதுமில்லை ஒருவேளை ஏதாவது இருந்தாலும் அதை தெரிந்து தெளிவாக எடுத்து சொல்ல இவர்களுக்கு அக்கறையோ இல்லை நேரமுமில்லை மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி