மேலும் செய்திகள்
நாளை வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு அழைப்பு
9 minutes ago
இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு
9 minutes ago
கறவை மாடு வாங்க கடன்
9 minutes ago
சென்னை : 'அங்கீகாரமில்லாத மனைகள் பத்திரப்பதிவுக்கு காரணமான, சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.பதிவுத்துறை பணிகள் குறித்த சீராய்வு கூட்டம், மாதந்தோறும் சென்னையில் நடக்கும், துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்பர். இதில், பத்திரப்பதிவு வருவாய் இலக்கை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படும். நிர்வாக ரீதியாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், இரண்டு மாதங்களாக சீராய்வு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் பதிவுத் துறை சீராய்வு கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:தமிழகம் முழுதும் அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்கள் அதிகமாக பதிவாகி உள்ளன. தேர்தல் சமயத்தில், சார் - பதிவாளர்கள் இதில் மிகவும் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க வேண்டிய தணிக்கை மாவட்ட பதிவாளர்களும், கடமை தவறி உள்ளனர். அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்யப் போகிறோம்.நானும், ஐ.ஜி.,யும் நேரடியாக ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்று ஆய்வு செய்து கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது குறுக்கிட்டு, மாநில பணி அலுவலர்கள் சங்கத் தலைவரும், தணிக்கை மாவட்ட பதிவாளருமான செந்துார்பாண்டியன் பேசியதாவது:சாலை இல்லாத இடங்களில் உள்ள நிலத்தை, வீட்டு மனையாக கருத முடியாது என்ற வழிகாட்டு தல், ஏற்கனவே கொடுக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான், பல இடங்களில், 20 சென்டுக்கு மேற்பட்ட நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என்று விதிகள் வகுத்து, புதிதாக அரசாணை போடுங்கள். அதை குறிப்பிட்ட தேதியில் இருந்து அமல்படுத்துங்கள். அதை விடுத்து, பழைய பதிவுகள் அடிப்படையில், சஸ்பெண்ட் செய்தால், பணிகள் தான் பாதிக்கும். ஏற்கனவே பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பல இடங் களில் அதிகாரிகள் இல்லாத நிலையே உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
9 minutes ago
9 minutes ago
9 minutes ago