உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாத ஊதியம்?

கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாத ஊதியம்?

சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவேல், மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு செயலர் சாந்தி ஆகியோர் கூறியதாவது:தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு பணியில், 12 ஆண்டுகளாக, 38,000 முன்கள பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய்கள் உட்பட பல நோய்கள் தடுப்பு பணிளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வளவு பணிகள் செய்தாலும், தினக்கூலியாக, 200, 250, 300, 440 என, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, தினக்கூலி முறையை கைவிட்டு, சம வேலைக்கு, சம ஊதியம் என்ற முறையில், அனைத்து கொசு ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக, 21,000 ரூபாய் வழங்கிட வேண்டும். பணி பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி