உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள்: தேடும் பணியில் அதிரடிப்படை

தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள்: தேடும் பணியில் அதிரடிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பந்தலூர்: தமிழக - கேரள எல்லை பகுதியான வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகளில், சில ஆண்டுகளாக நக்சல்கள் நடமாட்டம் தலை துாக்கியுள்ளது. வனத்தில் முகாமிட்டு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவது, போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தும் செயலிலும் ஈடுபட்டு வந்துஉள்ளனர். நக்சல் நடமாட்டத்தை தடுக்க எல்லையோர பகுதிகளில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை, கர்நாடகாவில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் என, வனத்தில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் தேர்தல் சமயத்தில், வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில், தொழிலாளர்கள் மத்தியில் வந்து தேர்தலுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு சென்றனர். இந்நிலையில், நக்சல் மனோஜ் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வனத்திலிருந்து நச்சல்கள் மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் எர்ணாகுளம் பகுதியிலிருந்து ரயில் வாயிலாக கோவை, ஈரோடு பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது வயநாடு பகுதியில் நக்சல் ஆதரவாளர்களுடன் தங்கி இருக்கலாம் என்றார். இதையடுத்து, மாநில அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூலை 28, 2024 19:31

திமுக ஆட்சியில் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகி வருகிறது. வாரிசுக்கு பதவிகொடுத்துவிட்டு வெளிநாடு சென்று சொகுசு அனுபவிக்கப்போகிறார் சுடலை. நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும் என்று கருணாநிதி அப்பா சொன்னதை செயலில் செய்து காட்டுகிறார் ஸ்டாலின்


N.Purushothaman
ஜூலை 28, 2024 10:41

நக்சல்கள் இங்கு வந்தால் அவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் வழங்கி அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய திராவிட மாடல் அரசு தயாராகவும் உறுதியாகவும் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...


lana
ஜூலை 28, 2024 10:01

தமிழகத்தில் நல்லவர்கள் ஐ தவிர எல்லாருக்கும் இடம் உண்டு. எங்க கட்டுமரம் இருந்தால் இதயத்தில் 2ம் இடம் உண்டு


நிக்கோல்தாம்சன்
ஜூலை 28, 2024 07:03

கேரளா நக்சல்கள் கூடாரம் ஆகி வருவது கண்கூடு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை