உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை போல யாரும் குடிக்கு அடிமையாகி விடக்கூடாது! முதல்வர் வீடு முன் போதை வாலிபர் ரகளை

என்னை போல யாரும் குடிக்கு அடிமையாகி விடக்கூடாது! முதல்வர் வீடு முன் போதை வாலிபர் ரகளை

சென்னை: 'நான் குடிபோதைக்கு அடிமையாகி விட்டேன்; என்னை போல வேறு எவரும் ஆகிவிடக் கூடாது' என, போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தில் வந்து, முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மனு கொடுக்க முயன்ற வாலிபர், ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. இங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஸ்டிக்கர்சட்டம் - ஒழுங்கு, உளவுத்துறை, போக்குவரத்து பிரிவு போலீசார், 24 மணி நேரமும் பணியில் இருப்பர். அவர்களுடன், 'கோர்செல்' எனப்படும், முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீசாரும் இருப்பர்.நேற்று முன்தினம் மதியம் 1:10 மணிக்கு, போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர், முதல்வர் வீட்டின், 6, 7, 8வது பாதுகாப்பு பாயின்ட் பகுதிக்கு, கெத்தாக வந்து இறங்கினார். மித மிஞ்சிய போதையில் இருந்த அந்த நபரை, போலீஸ்காரர் என்று நினைத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், சோதனை செய்யாமல் விட்டு விட்டனர். முதல்வர் வீட்டிற்குள் நுழைய முயன்ற அவரை, கோர்செல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது அந்த நபர், 'நான் குடிபோதைக்கு அடிமையாகி விட்டேன்; தமிழகத்தில் என்னை போல இனி யாரும் அடிமையாகக் கூடாது.'இதுபற்றி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்காமல், இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்' என்று, அடம் பிடித்து, ரகளை செய்தார். அந்த இடத்தில் இருந்து அவரை வெளியேற்ற, போலீசார் பெரும்பாடு பட்டனர்.விசாரணையில், அந்த நபர் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், சர்ச் தெருவை சேர்ந்த சந்தோஷ், 24 என்பது தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், கொளத்துார் போலீஸ்காரர் அருணுக்கு சொந்தமானது என்பதும், அவர் கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம், கார் டிரைவராக இருப்பதும் கண்டறியப்பட்டது. கேன் விநியோகம்அருண் மனைவி கோகிலா தேவி, நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் பணிபுரிகிறார். இவர்கள் ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர்.கோகிலா தேவிக்கு நன்கு அறிமுகமான நபர் வாயிலாக, சந்தோைஷ போலீஸ் குடியிருப்பில், தண்ணீர் கேன் வினியோகம் செய்ய தங்க வைத்துள்ளார்.ஹோட்டலுக்கு சென்று வருவதாக கூறிய சந்தோஷ், கான்ஸ்டபிள் அருணின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க முயன்று, ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சந்தோைஷ கைது செய்தனர், போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை