உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுமலை சீகூர் யானை வழித்தட தனியார் விடுதிகள்: 15 நாட்களில் இடித்து அகற்ற நோட்டீஸ்

முதுமலை சீகூர் யானை வழித்தட தனியார் விடுதிகள்: 15 நாட்களில் இடித்து அகற்ற நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடியை ஒட்டிய, சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2009ல் வக்கீல் யானை ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.தொடர்ந்து, 2011ல், யானை வழித்தடங்களில் உள்ள அனுமதியில்லாத சுற்றுலா விடுதிகள்; ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது.தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, 2018 ஆக., 12ல் யானை வழித்தடங்களில் உள்ள, 39 தனியார் விடுதிகளுக்கு, மாவட்ட நிர்வாகம், 'சீல்' வைத்தது. வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கையாக, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.அதற்காக, ஊட்டியில் தனி அலுவலகம் திறக்கப்பட்டது. அங்கு விடுதி உரிமையாளர்கள், உள்ளூர் மக்கள் தங்களுக்கு சொந்தமான இடம், கட்டடம் தொடர்பான ஆவணங்களுடன், தங்கள் கோரிக்கை விண்ணப்பங்கள் அளித்தனர்.இக்கமிட்டி, விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் அடிப்படையில் யானை வழித்தடங்களில் சீல் வைத்த கட்டடங்களை பலமுறை ஆய்வு செய்தது. தொடர்ந்து, யானை வழித்தடங்களில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றும்படி, அதன் உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு 'நோட்டீஸ்' அளித்தது. இதுவரை கட்டடங்கள் அகற்றப்படவில்லை.இந்நிலையில், சீகூர் யானை வழித்தடத்தில், தனியார் விடுதி கட்டடங்களை அகற்றி காலி செய்யும்படி, சோலுார் பேரூராட்சி, மசினகுடி உட்பட நான்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கட்டட உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, யானை வழித்தடங்கள் உள்ள தனியார் விடுதி கட்டடங்களை அகற்ற, அதன் உரிமையாளர்களுக்கு இரண்டாம் கட்ட 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் உரிமையாளர்கள் கட்டங்களை அகற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raa
ஆக 19, 2024 10:31

அனுமதி வாங்கியோ வாங்காமலோ கட்டியவரைக்கும் அதிகாரிகள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தனர்? எப்படி மின்சாரம், தண்ணீர், GST கட்டிய பிசினஸ் பண்ணும் வரை, அதிகாரிகள் என்ன தூங்கிக்கொண்டு இருந்தினரா என்ன?


A.Muralidaran
ஆக 19, 2024 08:39

இந்த மாதிரி விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்த இன்னசென்ட் திவ்யா ஆட்சியர் சில மாதங்களுக்கு முன் ஆளும் அரசியல்வாதிகள் தலையீட்டால் மாற்றப்பட்டது மக்கள் மறந்து விட்டார்கள்


S SRINIVASAN
ஆக 19, 2024 08:25

why so much procedure, if supreme court upholds the high court verdict, just remove by bull dozer, unfortunately yogi is not there in TN


tmranganathan
ஆக 19, 2024 08:20

முதலில் தீம்கவினர் கட்டிய கட்டடங்களை இடித்து தள்ளனும்.


பிரேம்ஜி
ஆக 19, 2024 08:15

கேஸ் போட்டது 2009 இல். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு 2018இல். இன்னும் தீர்ப்பை அமல் படுத்த இயலவில்லை. யானைகள் படையாக வந்து மனிதர்களை விரட்டி கட்டணங்களை இடித்து பாதைகளை மீட்டால்தான் உண்டு. ஆறு அறிவு ஜீவன்கள்தான் உண்மையில் மிருகங்கள்!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை