உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறந்தவர் வழக்கை விசாரிக்க உத்தரவு

இறந்தவர் வழக்கை விசாரிக்க உத்தரவு

மதுரை:சேரன்மாதேவி அருகே தென்திருப்புவனம் பழனியாச்சி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மகன் பேச்சிதுரை, 24, மார்ச் 11ல் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தான் அவர் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட கோரினார். அந்த மனுவை, நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் விசாரித்தார். அரசு தரப்பில், 'தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் பேச்சிதுரையின் முழங்காலுக்கு கீழே சுட்டனர். அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார்' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி நேற்று,''இந்த வழக்கை, திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நீதிபதி விசாரிக்க வேண்டும். அவரது அறிக்கையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை