உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவன் இறந்த வீட்டில் தொடரும் வெடிச்சத்தத்தால் பீதி

மாணவன் இறந்த வீட்டில் தொடரும் வெடிச்சத்தத்தால் பீதி

சென்னை:சென்னை கொளத்துார், ஜி.கே.எம்., காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது மகன் ஆதித்ய பிரணவ், 17. பிளஸ் 2 மாணவர். வேதியியலில் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் வேதிப் பொருட்களை வைத்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது.மார்ச் 21ம் தேதி ஆய்வில் ஈடுபட்ட போது, வேதிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், அவரது வீடு இடிந்து விழுந்தது. சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது, கை துண்டாகி இரு வீடுகளை தாண்டி ஒரு வீட்டின் மாடியில் விழுந்தது.காவல் துறை தடயவியல் போலீசார், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். அந்த வீட்டில் இருந்து, நேற்று மதியம் மீண்டும் வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து, பகுதிவாசிகளின் பீதியை போக்கும் வகையில், நேற்று இரவு வீடு முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை