உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகன்களிடம் இருந்து சொத்து மீட்டு தர பெற்றோர் மனு

மகன்களிடம் இருந்து சொத்து மீட்டு தர பெற்றோர் மனு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, மூக்கையூரைச் சேர்ந்த தம்பதி ராமசாமி, 85- - மாரியம்மாள், 80, தங்களை கடைசி காலத்தில் கைவிட்ட மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தருமாறு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:எங்களின் சொத்துக்களை இரு மகன்களுக்கும் தானமாக செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளோம். வயதான காலத்தில் மகன்களால் கை விடப்பட்ட நிலையில் சிரமப்படுகிறோம். இதனால், சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். இதுகுறித்து, பரமக்குடி சப் - கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இதையறிந்த ஒரு மகன் சொத்துக்களை தன்னிச்சையாக விற்கிறார். அவர் மீதும், சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவிற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raghu Gopalakrishnan
ஆக 25, 2024 08:28

மருமகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால் போதும் எல்லாம் சரி ஆகும்


ROSHAN S H115
ஆக 22, 2024 13:00

Better file a writ in the court. Collector petition will take a long time. At last the collectors order will be either rejection or compensation. My mother had a very bitter experience in this. Her petition was rejected by Chennai collector with no reason. With no proof and proper enquiry with the opposite party collector rejected. This clearly shows that the collector had taken a lethargic decision without thinking the life of senior citizen. So do not waste your energy and time with collectors or any govt.offcials. I can understand your financial problem. But you can get solution only with court.


Bakthavachalam Srinivasan
ஆக 22, 2024 05:57

இந்த தலைமுறையில் பெருமளவில் பெற்றோர்களை மதிக்காத உதாசீனம் செய்யும் பிள்ளைகள் தான் அதிகம் இருக்கின்றனர். காரணம் பிள்ளைகளின் சுயநலமான எண்ண ஓட்டம் அகம்பாவம் ஆணவம் கர்வம் கொண்ட மனநிலை தான்.


sridhar
ஆக 21, 2024 19:38

என்ன அவசரம் , உயில் எழுதி விட்டு சொத்தை தன் பெயரில் வைத்துக்கொள்ள வேண்டியது தானே .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ