உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பின்னணி பாடகி சுசீலா மருத்துவமனையில் அனுமதி: மிகவும் நலமுடன் உள்ளார்

பின்னணி பாடகி சுசீலா மருத்துவமனையில் அனுமதி: மிகவும் நலமுடன் உள்ளார்

சென்னை: பிரபல பின்னணி பாடகி சுசீலா உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ocz1v0x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=088 வயதாகும் பிரபல பின்னணி பாடகியான சுசீலா பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். பூத்மபூஷன் விருது . 5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.சுசிலா தனியாக 17,695 பாடல்களும் தெலுங்கில் மட்டும் 12 ஆயிரம் பாடல்களும் எஸ்.பி.பி.யுடன் 4 ஆயிரம் பாடல்களும், கே.வி. மகாதேவன் இசையமைப்பில் 2 ஆயிரம் பாடல்களும் கே. சக்ரவர்த்தி இசையமைப்பில் 2,500 பாடல்களும் பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிகமான பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார். தமிழில் பக்தி பாடல்கள் உள்ளிட்ட 6 ஆயிரம் பாடல்களும் கன்னடத்தில் 5 ஆயிரம் பாடல்களும் பாடியுள்ளார். எம்.எஸ்.வி இசையில் டி.எம்.செளந்தராஜன் உடன் 1,500 பாடல்கள் பாடியுள்ளார். மலையாளத்தில் 1,500 பாடல்களும் பாடியுள்ளார்.வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய உடல் நல குறைவு காரணங்களால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Chitra
ஆக 19, 2024 23:09

My prayers with love to beloved Susheela Amma for her speedy recovery and continued good health. I grew up listening to her music and still do.


ANONYMOUS
ஆக 17, 2024 23:57

தயவு செய்து விஜய் TV நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம்....


Mr Krish Tamilnadu
ஆக 17, 2024 23:10

வாழ்க்கை முறை மிகவும் மாறி விட்டது. ஆனந்தமயமான அமைதியான வாழ்க்கை முறை, எங்கே?. அளவான வருமானம், அழகான குடும்பம், சினிமா என்னும் பொழுதுபோக்கு, தாலாட்டும் உங்கள் காலத்து பாடகர், பாடகி பாடல்கள். கண்ணைமூடி மொட்டை மாடியில் படுத்து உறங்கும் அழகிய நிலவு தூக்கம். வெண்மையான நிலவு மனதின் தூய்மையை சாந்தத்தை ஏற்படுத்தும். எல்லாம் போய்விட்டது சுசீலா மேடம். 1960 டூ 1990 வரை வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறை, அதில் உங்கள் கானமும் இடம் பெறும். நலமுடன் இருங்கள் என்றும்.


vnatarajan
ஆக 17, 2024 22:32

பாடும் குயில் உடல் நலம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.


shanmugam G
ஆக 17, 2024 21:57

விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்


Ramesh Sargam
ஆக 17, 2024 21:44

சீக்கிரம் குணமடைய வேண்டுவோம்.


Rangarajan krishnan
ஆக 17, 2024 21:23

அந்த பாடும் சரஸ்வதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.


Swamimalai Siva
ஆக 17, 2024 20:59

GET WELL SOON


Barakat Ali
ஆக 17, 2024 20:58

நலம் பெற வேண்டும் .......


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ