உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி பெருமிதம்

ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி பெருமிதம்

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் வர்த்தினி மகாலில் நடந்த ராமேஸ்வரம் கம்பன் கழகத்தின் 35ம் ஆண்டு விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன் வரவேற்று பேசினார். விழாவில் கம்பனில் இலக்கியத்தாக்கம் எனும் நூலை கவர்னர் வெளியிட, இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.பின் கவர்னர் ரவி பேசியதாவது :கம்பர் ஒரு சித்தர், மகரிஷி, புரட்சியாளர் என கூறலாம். பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் ராமாயணம் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன்படி வாழ்ந்தார்கள். ஸ்ரீ ராமர் ஆட்சி காலத்தில் அவர் நல்ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததால் தான், இந்தியா சிறந்த நாடாக உள்ளது. இதனை மையமாக வைத்து தான் நம் அரசியல் சாசனமும் உருவானது.ராமாயணத்தின் வரலாற்றை பாமர மக்களும் எளிதில் தெரிந்திடும் வகையில் கம்பர் வடிவமைத்தார். தற்போது பிரதமர் மோடி ராமராஜ்ஜியம் ஆட்சியை நடத்துகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி பணிபுரிகிறார். சில வெளிநாடு தீய சக்திகள் நம்மை ஆரியர், திராவிடர்கள் என பிரித்தாள நினைக்கிறார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு நம் நாடு தான். இதில் யாரும் உரிமை கோர முடியாது. இதனையே பிரதமர் மோடியும் பின்பற்றி அனைத்து துறைகளையும் கட்டமைத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இன்று உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் இந்தியா அனைத்து துறைகளையும் வளர்ச்சி அடையும். புனித நகரான இங்கு ராமர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்ந்த பகுதியில் பிரதமர் மோடியும் சுவாமி தரிசனம் செய்துள்ளார் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

MADHAVAN
ஆக 14, 2024 13:20

அனொனிமாஸ் உனது தயார் சூற்பனையாக இருக்கும்போது என் முப்பாட்டன் ராவணனாக இருப்பது பரவாயில்லை


p.s.mahadevan
ஆக 13, 2024 16:01

UNMAIYEA. .


venugopal s
ஆக 13, 2024 11:00

இவர் ஏன் இப்படி?


Karunakaran
ஆக 12, 2024 23:18

ஐயா அப்படியே தமிழ் நாட்டுக்கு கொடுக்கவேண்டிடய மெட்ரோ ரயில் ப்ரொஜெக்ட்டுக்கான மத்திய அரசின் பங்கு பணத்தை விரைவில் வழங்க ஆவண செய்யுங்கள் ஐயா. மிக்க நன்றி. தமிழ் நாட்டின் வளர்ச்கிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 12, 2024 22:42

ஆளுநர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைப்பதில் பரிதி ரவி ஒருமுன்மாதிரி


Sathyanarayanan Sathyasekaren
ஆக 13, 2024 03:25

சித்தாந்த பூபதி, தங்கள் எந்த சித்தாந்தத்தை பின்பற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை, ராமரை பற்றி பேசினால் உங்களுக்கு கன்னியக்குறைவாக தெரிகிறதா? கொத்தடிமை புத்தி இப்படித்தான் போகும், 4 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி தான் பெற்றவர்களுக்கு கோடிக்கணக்கில் ஊழல் மூலம் சொத்துசேர்தவன், உங்களுக்கு நல்லவன்? வெட்கமாக இல்லை? ஹிந்துக்களை கேவலப்படுத்துவதில் உங்களை போன்ற ஹிந்துக்கள் தான் முதலிடம்.


சமூக நல விரும்பி
ஆக 12, 2024 22:34

ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆட்சி செய்த காலங்களில் மக்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகவும் சிறப்பாகவும் எல்லா வளமும் பெற்று இருந்தார்கள். அவர்கள் வேறுபாடு இன்றி இறை நம்பிக்கையும் இருந்தார்கள். ஆனால் இன்றோ ஆட்சியாளர்கள் கோயில் மற்றும் மக்கள் சொத்துக்களை எல்லோரையும் ஏமாற்றி ஆட்சி செய்கிறார்கள். இதை அப்போதே கடவுள் கலியுகத்தில் மக்கள் மிகவும் பல துயரங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கூறினார். இன்று மோடிஜி இறைவன் மீது உள்ள நம்பிக்கை மற்றும் மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்று நினைப்பதால் இன்று இந்தியாவை உலக நாடுகள் நம்மை திரும்பி பார்க்கும் அளவு மக்கள் நம்பிக்கை பெற்று இருக்கிறார். ஜெய் ஶ்ரீ ராம். ஜெய்ஹிந்த்


MADHAVAN
ஆக 12, 2024 22:32

ராம ராஜ்யமா ? இல்லை இது பிஜேபி ல இருக்குற ராவணன் ராஜ்யம்


Anonymous
ஆக 13, 2024 09:58

உங்களுக்கு தான் இராவணன் உங்க முப்பாட்டன் ஆச்சே? அப்ப நல்ல ராஜ்யம் தான், இல்லையா?


புலிப்பாண்டி
ஆக 12, 2024 22:06

அடுத்த பதவிக்கு துண்டு போட்டு வெச்சுருவோம். இளைஞர்களுக்கே வேலை கெடைக்க மாட்டேங்குது.


அப்புசாமி
ஆக 12, 2024 22:04

ஜெய் ஜகன்னாத்த்னு கூவ ஆரம்பிச்சுட்டாரே


Narayanan Muthu
ஆக 12, 2024 21:53

மோடி ராமரை கைவிட்ட கதை இவருக்கு தெரியாது போல. வேண்டுமானால் பூரி ஜெகநாத் ராஜ்யம் நடத்துகிறார் என்று சொல்லுங்கள். மோடி எந்த ராஜ்யம் நடத்தினாலும் அது மக்களுக்கு வேதனை ராஜ்ஜியம்தான். ஒரு பூஜ்யத்தின் ராஜ்ஜியம் என்ன பயனை தந்து விடும்.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 13, 2024 03:28

ஜெகந்நாதரும் ராமரும் ஒருவரேதான் என்ற அடிப்படை கூட தெரியாத தற்குறிகள். வெட்கக்கேடு.


மேலும் செய்திகள்