உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளுக்கு மீண்டும் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளுக்கு மீண்டும் போலீஸ் காவல்

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் மூவரை, மீண்டும் மூன்று நாட்களும்; வழக்கறிஞர் ஒருவரை ஐந்து நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1m5xj4mf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என, 16 பேர் கைதாகி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி பொன்னை பாலு உட்பட 11 பேர், ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய ரவுடி திருவேங்கடம், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் பூந்தமல்லி கிளை சிறையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து, சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனை,31, போலீசார் கைது செய்து, அதே சிறையில் அடைத்தனர். விசாரணையில், அவர் தான் கூலிப்படையினரை ஒருங்கிணைத்தது தெரியவந்தது.இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் செம்பியம் போலீசார், ரவுடிகள் பொன்னை பாலு, 39, திருநின்றவூரை சேர்ந்த ராமு,38, வழக்கறிஞர்கள் அருள், 33, ஹரிஹரன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.அந்த மனு, நீதிபதி ஜெகதீசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பொன்னை பாலு உட்பட நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோர், 'போலீசார் ஏற்கனவே எங்களை காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். அப்போது, எங்களுடன் விசாரிக்கப்பட்ட திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் அதே நிலை ஏற்படுமோ என்று, பயமாக உள்ளது. எங்களை போலீஸ் காவல் விசாரணைக்கு அனுப்ப வேண்டாம்' என, முறையிட்டனர். இதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரை மூன்று நாட்களும்; ஹரிஹரனை ஐந்து நாட்களும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ரவுடி நாகேந்திரன்

கூட்டாளியிடம் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி மின்ட் ரமேஷ் மற்றும் மூன்று வழக்கறிஞர்களிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்ட் ரமேஷ், பா.ஜ., நெசவாளர் அணி செயலராக இருந்துள்ளார். அவர் மீது, இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. நாகேந்திரனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில், எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.அதேபோல, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலை, உ.பி., மாநிலம் நொய்டாவில், தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

ரவுடி நாகேந்திரன்

கூட்டாளியிடம் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி மின்ட் ரமேஷ் மற்றும் மூன்று வழக்கறிஞர்களிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்ட் ரமேஷ், பா.ஜ., நெசவாளர் அணி செயலராக இருந்துள்ளார். அவர் மீது, இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. நாகேந்திரனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில், எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.அதேபோல, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலை, உ.பி., மாநிலம் நொய்டாவில், தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடாதுஎழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கு ஒன்றை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பு வழக்கறிஞர்கள் மோதிக்கொண்டனர். இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோதண்டராஜ் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், 'நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அமர்ந்து கூட்டமாக பேசக்கூடாது. பார் கவுன்சில் அலுவலகத்தில் தான் அமர்ந்து பேச வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ