மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
சென்னை : பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் படத்தை அணிவித்து, ஆட்டை வெட்டிய விவகாரம் தொடர்பாக, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதியில் தோற்றதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அருகே சிலர் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து, அதை வெட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பா.ஜ., சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் அமர்வு' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, ''இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை போலீசார் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 'இந்த விவகாரம் தொடர்பாக, சிவபிரகாசம் என்பவர் அளித்த புகார் அடிப்படையில், பாரத், ஆசைத்தம்பி, ராமன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.இதை பதிவு செய்த முதல் அமர்வு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
15 hour(s) ago