உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல்

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கான ஒப்புதலை விரைவில் மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்தார்.மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டருக்கான மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் 2023 ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வரை பரிசீலனையில் உள்ளது. லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளால் இத்திட்டச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மதுரை, கோவை மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகள் வேகமெடுக்கத் துவங்கியுள்ளன.* ஏ.ஐ.ஐ.பி., ஆய்வு: இந்நிலையில் இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்வதற்காக பெய்ஜிங்கின் ஆசியன் கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏ.ஐ.ஐ.பி.,)யின் போக்குவரத்து பிரிவு சிறப்பு சீனியர் அதிகாரி வென்யூ கு தலைமையிலான குழு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையான 32 கிலோ மீட்டர் வழித்தடப் பகுதிகள், நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தது. அக்குழுவுடன் சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன், முதன்மை பொது மேலாளர் (திட்டம்) ரேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். சென்னை 2வது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்த ஆசியன் வங்கி தான் நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை ஒப்புதலுக்கான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்தன. லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருந்ததால் சிறிது தாமதம் ஏற்பட்டது. விரைவில் மத்திய அரசு ஒப்புதலும் கிடைக்கும். இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய ஆசியன் வங்கி குழு ஆய்வு மதுரையில் ஆய்வை முடித்துள்ளது. இன்று (ஜூலை 4) கோவையில் ஆய்வு நடக்கிறது. இதுதவிர மேலும் பல நாடுகளை சேர்ந்த நிதியுதவி செய்யும் நிறுவனங்கள் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளது. தாமதமின்றி திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

டில்லிராஜா
ஜூலை 04, 2024 19:13

நட்டாவை கேட்டேன். 95 சதவீதம் மதுரை மெட்ரோ பணிகள் முடிஞ்சிடிச்சாம். இன்னும் 5 சதவீதம் முடிஞ்சி பிரதமருக்கு நேரம்.கிடைச்சால் பச்சைக்.கொடி காமிச்சு துவக்கி வைக்க தேதி கேட்டிருக்காங்களாம்.


காத்தி
ஜூலை 04, 2024 15:44

மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் அனுமதி தர கூடாது


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 10:45

நாட்டின் வளர்ச்சிக்கு கண்கூடான ஒன்று. நாட்டின் மிகப்பெரிய கிராமத்துக் கூட மெட்ரோ. அந்த ஊர் எம்பி தன்னுடைய குடும்ப சொத்தில் கட்டியது போல ஸ்டிக்கர் ஒட்டுவார்.


venugopal s
ஜூலை 04, 2024 10:37

மத்திய பாஜக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது ஊர் பெயரை மதுரை என்று சொல்லி விடாதீர்கள். பரோடா, ராஜ்கோட், அலஹாபாத், வாரணாசி என்று ஏதாவது குஜராத், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஊர் பெயர் சொன்னால் தான் ஒப்புதல் கிடைக்கும்.


Indian
ஜூலை 04, 2024 12:51

உண்மை ...உண்மை ....சரியாக சொன்னீர்கள் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை