மேலும் செய்திகள்
தி.மு.க., புள்ளி வாங்கிய சொத்துகள் பட்டியல் தயாரிக்கிறது அமலாக்க துறை
59 minutes ago | 3
இன்று முதல் 17 லட்சம் மகளிருக்கு ரூ.1,000
2 hour(s) ago | 1
எப்போதும் இல்லாத வகையில் வெள்ளி விலை உச்சம்
3 hour(s) ago
சென்னை:'நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, தொழில் நிறுவனங்களுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகி வருகிறது. பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், பல்வேறு அறிவுறுத்தல்களை, பொது சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.ஆனால், கட்டுமானம் சார்ந்த பணியாளர்கள், தெருக்களில் வியாபாரம் செய்பவர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர், நேரடி வெயில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவம் நடந்துள்ளது.உயிரிழப்பை தவிர்க்கும் வகையில், நேரடி வெயிலில் பணியாற்றுபவர்களுக்கான பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என, தொழில் நிறுவனங்களுக்கு, பொது சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:தமிழகத்தில் பல மாவட்டங்களில், 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்பவெப்ப நிலையில், நேரடியாக பணியாற்றும் போது உடலில், உடனடியாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்.அவற்றை அலட்சியப்படுத்தினால், உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலையில், சிகிச்சை விரைந்து கிடைக்காவிட்டால் உயிரிழப்புநேரிடலாம்.எனவே, கட்டுமான பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட நேரடி வெயிலில் பணியாற்றக்கூடியவர்கள் அனைவரது பணி நேரத்தையும் மாற்றியமைக்க, தொழில் நிறுவனங்களும், உரிமையாளர்களும் முன்வர வேண்டும். அதிகாலையில் இருந்து காலை வரையிலும், பின் மாலையில் இருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில், ஓ.ஆர்.எஸ்., கரைசல், குடிநீர் வசதியை ஊழியர்களுக்கு செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
59 minutes ago | 3
2 hour(s) ago | 1
3 hour(s) ago