உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி

மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

நிபந்தனைகள்:

வளாகத்தில் வீணாகும் இயற்கை கழிவுகளை, 'பயோ-காஸ்' திட்டத்தில் எரிபொருளாக மாற்றி, சமையலறைக்கு பயன்படுத்த வேண்டும். கழிவு நீரை சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத வகையில், 'ஜீரோ வேஸ்டேஜ்' ஆக சுத்திகரிக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.வளிமண்டலத்திலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் யூனிட்டை, இந்தியா அல்லது சர்வதேச தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வகையில் அமைத்து, ஆக்சிஜனை சொந்தமாக தயாரிக்க வேண்டும்.ஆப்பரேஷன் தியேட்டர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, நச்சுக்களை வாரம் ஒரு முறை, காற்று மாதிரி பரிசோதனைக்கு எடுத்து, தரத்தை கண்காணிக்க வேண்டும். சிவகாசி, விருதுநகர் வெடி விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும்.இவ்வாறு பல நிபந்தனைகளை மதிப்பீட்டு குழு பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
மே 15, 2024 17:15

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இந்த மே மாதம் இரண்டாம் தேதி அன்று தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்பத்தை பத்தாம் தேதி அன்று அனுமதி வழங்கப்பட்டது.இந்த உண்மை தெரியாமல் வழக்கம் போல் தமிழக அரசை இந்த விஷயத்தில் குறை கூற வேண்டாம்.


ஆரூர் ரங்
மே 15, 2024 14:09

பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் ( வருமுன் காக்க)ஒன்றும் உருப்படியாக செய்துள்ளனரா? அதனை விட்டுவிட்டு எங்கோவுள்ள மருத்துவமனையில் தீக்காயப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என கண்டிஷன் போட சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு என்ன உரிமையுள்ளது? மாநில அரசின் பொறுப்பை நைசாக மத்திய அரசிடம் தள்ளி விடலாமா? நோய்த்தடுப்புக்கு முக்கியத்துவம் தராமல் அரசியலுக்காக எய்ம்ஸ் உருவாக்கம் வேண்டாத வேலை.


K.Muthuraj
மே 15, 2024 13:57

இது வரைக்கும் மாநில அரசு மருத்துவமனைகளில் தீக்காயப்புண் சிகிச்சை என்பதே சும்மா பேச்சுக்குத்தான் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுவார்கள் அதுவும் பட்டாசு தீப்புண்பட்டவர்கள் பெரும்பாலும் கொடும் துன்பத்திற்கு பின் இறந்து விடுவார்கள் மாநில அரசின் இந்த நிபந்தனை, சிகிச்சையின் விளைவால் உண்டாகும் பழியினை மத்திய அரசு மருத்துவமனை மேல் போட்டுவிடுவதான ஒரு உத்தியே


M S RAGHUNATHAN
மே 15, 2024 12:11

இந்த விதிகளை யார் விதிக்கிறார்கள் மத்திய அரசா அல்லது மாநில அரசா? இவை அனைத்து அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளுக்கு உண்டா? இல்லையென்றால் ஏன் AIIMS மருத்துவ மனைக்கு மட்டும் இரண்டு அரசுகளும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனர்


ஆரூர் ரங்
மே 15, 2024 11:31

அதே மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி ராஜாஜி மருத்துவமனையின் கழிவுகள் வைகை ஆற்றில் கலக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. உங்க கட்டுப்பாடுகள் மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும்தானா? எய்ம்ஸ் தாமதத்திற்கு மாநில அரசு முக்கிய காரணம் என்றே யூகிக்க முடிகிறது


A1Suresh
மே 15, 2024 10:33

மத்திய அரசிற்கு நற்பெயர் வந்து விடக் கூடாது என சென்னை-பெங்களூர் விரைவு சாலை, சென்னை -சேலம் விரைவு சாலை, கோவை-கரூர் விரைவு சாலை , மதுரை எய்ம்ஸ் என்று அனைத்திற்கும் ஆமை வேகத்தில் நிலங்கள் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் அனுமதி, அரசியல் இடையூறுகள்-தடைகள், முடிவாக ஆர்வமின்மை, முயலாமை என அனைத்தையும் பயன்படுத்துகிறது மாநில அரசு முடிவில் செங்கல்லையும் காட்டி பாமரர்களை ஏமாற்றுகின்றனர்


RG GHM
மே 15, 2024 10:33

சிவகாசி பட்டாசு ஆலையில் பாதுகாப்பு முறைகள் மற்றும் அதன் ஆபத்து குறித்த விழுப்புணர்சி பற்றிய தகவல் அங்கு பணி புரியும் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.


duruvasar
மே 15, 2024 09:32

ஐயா சுற்றுச்சூழல் காவலர்களே இந்த விதிமுறைகள் மாநில அரசு மருத்துவ மனைகளுக்கு பொருந்துமா அல்லது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று உத்தரவாதம் தருவீர்களா? ஒரு பெரிய மருத்துவமனை கட்டும்போது இந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் கட்டபடவேண்டும் இந்த விதிமுறைகள் அடங்கிய அச்சிடப்பட்ட பேப்பரை கொடுப்பதற்க்கு உங்களுக்கு/ வருடம் ஆகியிருக்கிறது இதுதான் திராவிட மாடலா?


G.Kirubakaran
மே 15, 2024 09:32

அதெல்லாம் சரி தட்சமயம் இயங்கும், அணைத்து மருத்துவ மனைகளும் இந்த விதி முறைகளை கடை பிடிக்கின்றனவா


N MARIAPPAN
மே 15, 2024 09:30

அப்போ அந்த % வேலை இன்னும் முடியலையா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை