மேலும் செய்திகள்
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
15 minutes ago
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
7 hour(s) ago | 5
சென்னை : தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு, ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன்; பெட்ரோல் கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலையில் கவுரவ பேராசியராக பணியாற்றி உள்ளார். அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான்.இவர்கள் மூவரும், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பான, 'ஹிஸ்ப் உத் தாஹரீர்' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து, மூவரிடமும் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ், 36; காதர் நவாஸ் ஷெரிப், 35, அகமது அலி உமரி, 46, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ளது. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில் முதற்கட்ட விசாரணை நடக்கிறது.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:குற்றத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால், விசாரணையை கையில் எடுத்துள்ளோம். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதில், டாக்டர் ஹமீது உசேன் தீவிரமாக செயல்பட்டுள்ளார். டாக்டர் ஹமீது உசேன், அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னணி குறித்தும் விசாரித்து வருகிறோம்.அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த, நான்கு பேரின் மொபைல் போன்கள், 'சுவிட் ஆப்' செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.ஹமீது உசேன், சென்னையில் மட்டுமல்ல, வேறு சில இடங்களிலும், பயங்கரவாத கொள்கை குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அதற்காக துவங்கப்பட்ட, 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' அலுவலகம் மற்றும் அங்கு வந்து சென்றவர் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
15 minutes ago
7 hour(s) ago | 5