உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? அறிக்கை கோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? அறிக்கை கோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த தாக்கலான வழக்கில், தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு வனப்பகுதியில், 2003 முதல், புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் 2021ல் புத்துணர்வு முகாம் ஒத்திவைக்கப்பட்டது; அதன் பின் நடத்தப்படவில்லை.யானைகளால் பிறர் கொல்லப்படுவதை தவிர்க்க புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அங்கு, யானைகளுக்கு சரிவிகித உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. சக யானைகளை பார்ப்பது, பழகுவதால் மனரீதியான இறுக்கம் குறைகிறது.எனவே, கோவில்களில் உள்ள மற்றும் பிற வளர்ப்பு யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில், 'புத்துணர்வு முகாமிற்கு வாகனங்களில் யானைகளை அழைத்து வருவதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன' என தெரிவிக்கப் பட்டது.நீதிபதிகள்: இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து, அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், வனத்துறை முதன்மைச் செயலர் செப்., 9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
ஆக 20, 2024 07:48

யானைகளுக்கு புத்துணர்வு முகாமா? வாய்ப்பில்லை ஒட்டகங்களுக்கு வைத் தாலும் வைப்பார்கள். சிறும்பான்மை யினரின் வாக்குகளை சுலபமாக பெறலாம். யானைகள் நம் ஆலயங்களோடும் வழிப்பாட்டோடும் நேரடி தொடர்புள்ளவைகள். அதனால் கண்டுக் கொள்ளாமலிருக்கலாம். 300 மாணவிகள் படிக்கும் கல்லூரி-வெறும் 2கழிப்பறைகள் ஆனால் யாருக்கோ சமாதிக் கட்ட கோடி. இதையெல்லாம் மக்கள் கண்டுக் கொள்ள மாட்டார்களா?


Kasimani Baskaran
ஆக 20, 2024 05:35

இந்து அரநிலையத்துறை கடவுளுக்கு ஒவ்வாத காரியங்களிலேயே காலத்தை செலவிடுகிறது. ஆகையால் யானைகளை பராமரிக்க நேரமில்லை.


N Sasikumar Yadhav
ஆக 20, 2024 04:26

கருத்தரின் ச்சீடர் இந்துமத துரோக திருட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து சிக்கல் வந்துவிட்டதா . ஓசியும் இலவசமும் வாங்கிக்கொண்டு இந்துமத துரோக திமுகவுக்கு வாக்களித்ததால் வந்த வினை இது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை