உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பேச்சுக்கு ரெட்டியார்கள் எதிர்ப்பு 

அமைச்சர் பேச்சுக்கு ரெட்டியார்கள் எதிர்ப்பு 

பெரம்பலுார்:தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் ரெட்டியார் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ரெட்டியார் சமுதாய மக்கள் ஹோட்டல்கள் நடத்தி வசதியான வாழ்க்கை நடத்துவதாக பேசினார். இது தொடர்பாக, சபையிலேயே மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்திச் சொன்னதன் பேரில், சபையிலேயே மன்னிப்புக் கோரி தன் வருத்தத்தை பதிவு செய்தார் அமைச்சர் கண்ணப்பன்.அதன்பின்பும், இந்தப்பிரச்னை 'நீறுபூத்த நெருப்பாக' கனன்று கொண்டே இருக்கிறது. ரெட்டியார் சமூக மக்கள், தங்கள் சமூகம் குறித்து விமர்சித்த கண்ணப்பனுக்கு எதிராக தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு மேட்டூர் ரெட்டி நலச்சங்க பொருளாளர் நீலகண்டன் கூறியதாவது:ரெட்டியார் சமூகம் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டசபையில் பேசியது உண்மைக்கு புறம்பானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தமிழகம் முழுதும் விவசாயம் செய்து பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில், இன்றைக்கும் வறுமையில் தான் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஜூன் 29, 2024 21:37

தமிழகத்தை ஆள்பவரே ஓங்கோல் அரசர்தானய்யா இதில் என்ன வியப்பு சந்தேகம் ஆட்சேபனை இருக்கிறது நடப்பதைதான் மக்கள் சொல்கிறார்கள் பொங்கி எழ வேண்டாம் உண்மையை மறக்க முடியாது என்றாவது ஒருநாளாவது உண்மை வெளி வந்தேதான் ஆகவேண்டும்


R SRINIVASAN
ஜூன் 29, 2024 15:56

சில மாதங்களுக்கு முன்னாள் அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் ஒரு கருத்தை சொன்னார் .பழைய நாட்களில் ப்ராஹ்மணர்களை தவிர வேறு யாரும் ஹோட்டல் நடத்த முடியாது என்றும் பெரியார் வந்த பின்புதான் இந்த நிலைமை மாறியது


Sridhar
ஜூன் 29, 2024 13:05

இப்போ பொங்குற நீங்க, ஜாதிய ஒழிக்கணும்னு கும்பல்கள் கோஷம் போடும்போது மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க? வாங்க, எல்லா ஜாதிகாரங்களும் சேர்ந்து ஒண்ணா கொதித்து எழுந்து அந்த கும்பலை துரத்துவோம். அப்புறம் ஒரு பய எந்த ஜாதியையும் எதிர்த்து பேசமாட்டான். உயர்வு தாழ்வு இல்லாம எல்லா ஜாதியும் முக்கியம்


Sampath Kumar
ஜூன் 29, 2024 10:37

அவரு சொன்னதில் ஒரு தப்பும் இல்லை இந்த சமூகத்தினர் தான் தமிழ் நாட்டில் ஏராளமான நிலங்களை காயாக படுத்தி விவசாயம் என்ற பேரில் வைத்து உள்ளார்கள் குறிப்பாக ஹோட்டல் தொழில் செய்து வருபவர்களில் மிக அதிகமான பேரும் இந்த சமூகத்தி சார்ந்தவர்கள் தான் வேடும் என்றால் தி மு க அமைச்சர் நேருவை கேட்டு சொல்லுங்கள் தெலுகு மக்கள் தமிழ் நாட்டில் சுமார் 40 சதா விகிதம் உள்ளார்கள் அவர்கள் அமோகம் தான் தமிழ் நாட்டை யாரு ஆல்வேண்டு என்று தீர்மானிக்கும் ஒரு சக்தியை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை