வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பின்னே இருக்காதா என்ன தமிழன் தமிழனாக இல்லை
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் வேலை பார்ப்பதில் கில்லாடி என்பதை, ஈரோட்டில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலின்போது நிரூபித்தார். இதனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளை அவரிடம் ஒப்படைக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், அவரிடம் இருந்து தேர்தல் தொடர்பான ஆலோசனை பெற்ற தி.மு.க., தலைமை, அவருடைய தீவிர ஆதரவாளரான கணபதி ராஜ்குமாரை கோவை லோக்சபா தொகுதிக்கான வேட்பாளராக்கியது. இதனால், கணபதி ராஜ்குமார் வெற்றிக்காக செந்தில்பாலாஜி பாடுபட்டார். அதேபோல கரூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதிமணிக்காகவும் தன்னுடைய ஆதரவாளர்கள் வாயிலாக தேர்தல் பணி யாற்றினார். இருவரும் வெற்றி பெற்ற செய்தி அறிந்து, செந்தில்பாலாஜிமகிழ்ந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -
பின்னே இருக்காதா என்ன தமிழன் தமிழனாக இல்லை
2 hour(s) ago