உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழமையான கோவிலில் சித்தார்த் - அதிதி திருமணம்

பழமையான கோவிலில் சித்தார்த் - அதிதி திருமணம்

சென்னை : நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும், கோவிலில் எளிமையாக நேற்று திருமணம் செய்து கொண்டனர்.மணிரத்னம் இயக்கிய, ஆயுத எழுத்து படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். பின், ஷங்கர் இயக்கிய, பாய்ஸ் படத்தில் நாயகனானார். சமீபத்தில் வெளியான, இந்தியன் - 2 படத்திலும் நடித்திருந்தார்.அதேபோல, மணிரத்னம் இயக்கிய, காற்று வெளியிடை படம் வாயிலாக தமிழில் பிரபலமானவர் அதிதி ராவ். மகா சமுத்திரம் படத்தில் நடித்த போது, சித்தார்த் உடன் அதிதி ராவ் காதல் வயப்பட்ட நிலையில், இருவருக்கும் இந்தாண்டு மார்ச்சில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், நேற்று ஹைதராபாதில் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில், எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் சூழ, சித்தார்த்துக்கும், அதிதி ராவுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அதிதி ராவ், 'நீ தான் என் சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்களும் நீ தான்… என்னுள் பாதி நீ' என, கவிதை மழை பொழிந்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 20, 2024 20:39

சனாதன தர்மத்தை, ஹிந்துக்களை கேவலமாக பேசும் இவன் திருமணம் செய்து கொள்ள மட்டும் கோவில் கேட்கிறதா? இவன் பின்னால் சுற்றும் ஹிந்துக்களை என்னவென்று சொல்வது?


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2024 14:09

இவனும் ஓங்கோல் பார்ட்டி தானா , கார்பொரேட் குடும்பத்தில் இவனுக்கு என்று பெண்ணே பிறக்கவில்லையா?


ram
செப் 17, 2024 11:45

பாவம் அந்த பொண்ணு இவனை நம்பி


saravanan
செப் 17, 2024 09:01

காதலில் நீ பாதி நான் மீதி என்பதெல்லாம் இல்லை ஒருவர் மற்றவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமே நிகழும் அதையே கவிதை வரியில் எனது உலகம் மட்டுமல்ல அணைத்தும் நீ என்பதாக பதிவிட்டிருக்கிறார் அதிதி சித்தார்த் அதிதி ராவ் மண வாழ்க்கை தாமரை இலையாய் அல்லாமல் தாமரை பூவாய் மலர வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை