உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைதயாநிதியை நலம் விசாரித்த ஸ்டாலின்

துரைதயாநிதியை நலம் விசாரித்த ஸ்டாலின்

வேலுார் : தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரரான அழகிரியின் மகன் துரைதயாநிதி, உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சையில் உள்ளார்.கடந்த மார்ச், 14ல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, வேலுார் சி.எம்.சி., தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு, 'ஏ' வார்டில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டு இரு மாதங்களாக உயர் ரக சிகிச்சை பெற்று வருகிறார்.அங்கு நேற்று சென்ற முதல்வர் ஸ்டாலின், துரைதயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு முன் ஏப்., 2ம் தேதி வேலுாரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அவர், துரைதயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.தற்போது, 2வது முறையாக சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அவரின் மருமகன் சபரீசன், அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் சென்றனர். துரைதயாநிதிக்கு அளித்த சிகிச்சையில், அவர் உடல் நலம் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளதாக, சி.எம்.சி., மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

s vinayak
மே 09, 2024 15:37

இதுபற்றி செய்தி படிக்கும்போதெல்லாம் மதுரை பத்திரிக்கை ஊழியர்கள் மரணம்தான் ஞாபகம் வருகிறது


Muralidharan S
மே 09, 2024 16:50

நன்றும் தீதும் பிறர் தர வாரா கர்மா தன பணியை செவ்வனே செய்கிறது / செய்யும்


Ramesh Sargam
மே 09, 2024 11:51

இந்த அக்கறையை வாக்களித்த மக்கள் கஷ்டப்படும்போதும் காட்டவேண்டும் ஆனால், கஷ்டம் கொடுப்பதே நீங்கள்தானே


Anantharaman Srinivasan
மே 09, 2024 11:19

துரைதயாநிதிக்கு என்னங்க உடம்புக்கு?


duruvasar
மே 09, 2024 08:09

அங்குள்ள மருத்துவர்களிடம் நன்றாக கவனித்து நல்ல முறையில் சிகிச்சை கொடுக்க கொச்சச்சன் அறுவுறுத்தியிருப்பார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை