உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து

கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவில் சொத்துக்கள் பராமரிப்பு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை மறுத்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, குறிப்பிட்ட அந்த நிலம், நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சொந்தமானதா என்ற கேள்வி எழுந்தது. நிலம் தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை.வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ''கோவில் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை, அதிகாரிகளால் தாக்கல் செய்ய முடியவில்லை. கோவில் சொத்து குறித்த பதிவேட்டையும், சொத்தையும் பராமரிப்பதில், அறநிலையத்துறை சட்டத்தை அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே, இந்தக் கோவில் சொத்துக்கள் குறித்தும், அதை முறையாக பராமரிக்காமல் தவறு செய்த அதிகாரிகள் குறித்தும், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, கோதண்டராமர் கோவில் நிர்வாக அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. நிர்வாக அதிகாரி சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை கவனமுடன் அதிகாரிகள் பாதுகாப்பர்,'' என்றார்.இதையடுத்து, ''தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், கோவில் சொத்துக்களை கவனித்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்ததாலும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுகிறது,'' என, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

விடியல்
ஏப் 07, 2024 11:11

இதில் என்ன தவறு கண்டு பிடித்தார் இந்த புதிய நீதிபதி.சிபிஐ வழக்கு விசாரித்தால் உண்மை வரவஆய்ப்பஉ இருந்தது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக துறைத்தலைவர் பேட்டி கொடுத்து காப்பாற்ற வந்தது இவருக்கு தெரியாமல் இருக்காது.அப்படிஇருந்தும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னதை வைத்து தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது அரசியல் வாதிகளை விட மோசமானது.இவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த குற்றம் செய்தவர்கள் இறந்து போனால் வழக்கு மூடப்படும் என


S. Gopalakrishnan
ஏப் 07, 2024 10:32

கழக மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் கொண்ட குழு இனி இப்படிப் பட்ட விஷயங்களை விசாரணை செய்யலாம். நீதிமன்றம் செல்ல வேண்டாம்.


VENKATASUBRAMANIAN
ஏப் 07, 2024 07:56

நல்ல தீர்ப்பு விளங்கிடும் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது


Kanns
ஏப் 07, 2024 07:52

State Ruling Party Biased Judgement


Palanisamy Sekar
ஏப் 07, 2024 06:45

எந்தமாதிரியான தவறுகள் அங்கே நடந்தது அந்த அதிகாரிகள் மீது என்ன மாதிரியான துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? காரணம் என்ன? அந்த நிலத்தின் மதிப்பு என்ன அதன் பாத்திரங்கள் பற்றியெல்லாம் கோர்ட் விசாரிக்காமல் முடித்துவைத்தது பக்தர்களிடையே ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது அதிகாரிகள் மிரட்டப்பட்டனரா அப்படி இல்லை என்றால் ஏன் பாத்திரங்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர் கோவில் சொத்துக்களை யார் யாரோ ஏப்பம் விட்டுக்கொண்டே உள்ளனர் ஆங்காங்கே கோவில்கள் உள்ள இடங்களில் உண்மையான பக்தர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க முன்வரவேண்டும் அதுவே இறைவனுக்கு செய்கின்ற தொண்டாக கருதப்படும் இறைவனால்


Rpalnivelu
ஏப் 07, 2024 03:27

எங்கேயோ உதைக்குதே? திருட்டு த்ரவிஷன்களின் ஆட்சியில் அறமில்லா துறை ஜொலிக்கிறதே


kumar
ஏப் 07, 2024 03:19

சுத்தம் அவரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ன்னு சொன்னாராம் ஜட்ஜு கேஸை டிஸ்மிஸ் பண்ணீட்டாராம் என்ன நடவடிக்கை , என் இத்தனை நாளா கோவில் சொத்துக்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பை வைக்கவில்லை , இனி எப்படி செய்யப்போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டு மக்களுக்கு சொல்ல வேண்டாமா ? இந்த மாதிரி தீர்ப்பு வருமென்பதால் தான் சிபிஐ விசாரணைக்கெல்லாம் யாரும் பயப்படாமல் இனிமேல் நல்லவனாக இருக்கிறேன் யுவர் ஆனர் என்று சொல்லி தப்பி விடலாம் கோவில் சொத்தை நிம்மதியாக கொள்ளை அடிக்கலாம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ