உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி நீர்வரத்து சரிவு குறுவை சாகுபடிக்கு சிக்கல்

காவிரி நீர்வரத்து சரிவு குறுவை சாகுபடிக்கு சிக்கல்

சென்னை: கர்நாடகா முறைப்படி காவிரி நீரை வழங்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு சிக்கல் எழுந்துள்ளது.'தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த, 2023 - 24ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், 96 டி.எம்.சி., நீரை, கர்நாடகா அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், 2024 - 25ம் ஆண்டுக்கான புதிய நீர் வழங்கும் காலம், இம்மாதம் 1ம் தேதி முதல் துவங்கியுள்ளது. ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். அதன்படி, 6ம் தேதி வரை தமிழகத்திற்கு 1.83 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 0.63 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்துள்ளது. நிலுவை நீரின் அளவு, 1.20 டி.எம்.சி.,யாக உள்ளது.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாதபட்சத்தில், வரும் நாட்களில், நிலுவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. காவிரி நீரை நம்பி, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை முன்கூட்டியே விவசாயிகள் துவக்கியுள்ளனர். நீர் கிடைக்காத பட்சத்தில் பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்று, தமிழகத்திற்கு நீர் திறக்கும்படி, வழக்கம் போல தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர். இப்பிரச்னையை முறையாக அணுகி நீரை பெற்று தர, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.--- தினகரன்,அ.ம.மு.க., பொதுச்செயலர்.

சிறப்பு குறுவை

திட்டம் அவசியம்! காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம், 44 அடியாக சரிந்துள்ளது. நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக, வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது.காவிரி டெல்டா பாசன பகுதிகளில், கடந்த ஆண்டும் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாதது, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.விவசாயிகளுக்கு விதை, நெல், உரங்கள். இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கும் வகையில், சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை