மேலும் செய்திகள்
விடுதி மாணவர்களுக்கு வரவேற்பு பெட்டகம்
52 minutes ago
மார்கழி வழிபாடு:திருப்பாவை, திருவெம்பாவை-7
1 hour(s) ago
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன், நேற்று பொறுப்பேற்றார். பொறுப்பு தலைமை நீதிபதியான பின், முதல் வழக்காக, கோவில் தொடர்பான வழக்குகளை விசாரித்து உத்தரவிட்டார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா, ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார்.உயர் நீதிமன்றத்தில், பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன், நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பேற்றதும், முதலாவது கோர்ட் ஹாலுக்கு, நீதிபதி ஆதிகேசவலு உடன் வந்து அமர்ந்தார். அவருக்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாழ்த்து தெரிவித்தார். பின், கோவில்கள் தொடர்பான வழக்கு களை, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தலைமையிலான முதல் பெஞ்ச் விசாரணைக்கு எடுத்தது.கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த, இதே சிறப்பு அமர்வு, 75 உத்தரவுகளை பிறப்பித்துஇருந்தது. அந்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றியது குறித்து, நீதிபதிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஆஜராகி, “நீதிமன்றம் பிறப்பித்த 75 உத்தரவுகளில், பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை,” என்றார். அதற்கு, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.இதையடுத்து, ஜூன் 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பா கவும், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மற்ற வழக்குகளின் விசாரணையை, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பின், பொறுப்பு தலைமை நீதிபதி, நீதிபதி முகமது ஷபிக் சேர்ந்து சில வழக்குகளை விசாரித்தனர்.
52 minutes ago
1 hour(s) ago