மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
44 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை, சுற்றுவட்டாரத்தில் உள்ளோர்,சரக்கு வாகனங்களுடன் முற்றுகையிட்டனர். அப்போது, மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வை கண்டித்து, சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். வாழப்பாடி போலீசார் வந்து, பேச்சு நடத்தினர்.சரக்கு வாகன உரிமையாளர்கள் கூறியதாவது:சுங்கச்சாவடியை சுற்றி, 100க்கும் மேற்பட்டோர், சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்கிறோம். குறிப்பாக காய்கறி, கால்நடை, பூக்கள் உள்ளிட்டவற்றை சரக்கு வாகனத்தில் எடுத்து செல்கிறோம்; வாடகைக்கும் பயன்படுத்துகிறோம்.கடந்த மாதம் வரை, சுங்கச்சாவடிக்கு, 10 கி.மீ., சுற்றியுள்ள மஞ்சள் நிற, 'நம்பர் பிளேட்' உள்ள சரக்கு வாகனங்களுக்கு கட்டணமாக, 150 ரூபாய் வசூலித்து மாத பாஸ் வழங்கப்பட்டது.திடீரென நடப்பு மாதம் முதல், 1,945 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 2 வாரங்களுக்கு முன்பே, கட்டணத்தை குறைக்கக் கோரி, சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.இந்த சுங்கச்சாவடியில் மட்டும் தான் இந்த அளவு விலை உயர்த்தியுள்ளனர். மாதாந்திர பாஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, சுங்கச்சாவடி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூற, அனைவரும் கலைந்து சென்றனர்.
44 minutes ago
11 hour(s) ago | 1
12 hour(s) ago