உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறுப்பு பேச்சை வேடிக்கை பார்க்கும் போலீஸ்

வெறுப்பு பேச்சை வேடிக்கை பார்க்கும் போலீஸ்

கோவை : கோவையில், சி.எஸ்.ஐ., மதபோதகர், ஹிந்துக்களின் மத உணர்வுகளைத் துாண்டும் வகையில் பேசியுள்ளதற்கு எதிராக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை, சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், கடந்த ஜூன் 16ல் நடந்த கூட்டத்தில், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹிந்துக்களின் மத உணர்வை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மதபோதகர் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கைது இல்லை

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத நம்பிக்கைக்கு எதிராக, மத உணர்வுகளை துாண்டும் நோக்கத்துடனும், குரோதமான உட்கருத்துடன்; சமய, இன, மொழி தொடர்பாக சமூகத்தினர் இடையே பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதித்து பேசுதல்; பகை உணர்வும் வெறுப்பும் உண்டாக்கும் வகையில் பேசுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 'பா.ஜ.,- இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டாலே மத உணர்வை துாண்டுவதாக கூறி உடனுக்குடன் கைது செய்யும் போலீசார், மதபோதகர் விஷயத்தில் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்' என்ற குற்றச்சாட்டு இந்து அமைப்புகள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், 'இந்துக்களை இழிவு படுத்தும் பாதிரியாரின் மத துவேஷ பேச்சை நேரடியாக முகநுாலில் ஒளிபரப்பியுள்ளனர்; அதற்கான ஆதாரங்களை சேகரிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவ்வாறிருந்தும் சாக்கு போக்கு சொல்லி, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் போலீசார் பதுங்குகின்றனர். இது, 'ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு' என, பதிலடியான சம்பவங்கள் நிகழ வழி ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. நாங்கள் போராட்டத்தில் இறங்கும் முன் போலீசார் விழித்துக்கொண்டால் நல்லது' என்றனர்.

போலீஸ் விளக்கம்

மாநகர போலீசார் கூறுகையில், 'முகநுாலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'லிங்க்' தற்போது அழிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மைத்தன்மையுடன் வீடியோ ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் கைது நடவடிக்கை தாமதமாகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sugumar s
ஜூலை 04, 2024 14:19

Why TN police has not arrested this guy. When they formed teams to arrest kanal kannan they support this fellow because the ruling party is supporting this. It gives doubt that Police dances to rulers tune


Apposthalan samlin
ஜூலை 04, 2024 13:27

அப்படி என்ன பேசினார் ?


sridhar
ஜூலை 04, 2024 12:42

போலீஸ் விளக்கம் சூப்பர் , கீப் இட் அப் , இன்னும் பத்து வருஷம் நிதானமா விசாரியுங்க , நம்ம சொரணை இல்லாத ஹிந்துக்களுக்கு எதுவும் உரைக்காது .


M S RAGHUNATHAN
ஜூலை 04, 2024 11:05

இவனைப் பார்த்தா பேட்டை ரவுடி மாதிரி இருக்கு. புனிதமான "Father" என்ற வார்த்தையை இவனுக்கு குடுக்க வேண்டாம்.


Vaduvooraan
ஜூலை 04, 2024 10:54

இதை சும்மா விடுவார்களா மானமுள்ள ஹிந்து பெருமக்கள்? விக்கிரவாண்டி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தல் வரிக்கும் திமுகவுக்கு ஓட்டு போட்டு பெருவாரி வித்தியாசத்தில் ஜெயிக்க வெச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 04, 2024 10:42

எஸ்ரா துர்குணம் மற்றும் ஜெகத் கேஸ்பர் ஆசியோடு இவரைப்போன்ற பாதிரியார்கள் இன்னும் மாற்று மதத்தினரை கேவலமாகப்பேசுவார்கள். போதாதற்கு இவர்களுக்கு மந்திரி சபையில் வெள்ளாட்டு மந்திரியின் ஆசியும் அமோகமாகவே இருக்கிறது. சர்வ நிச்சயமாக ஏவல் துறை கை கட்டி வாய் பொத்தி தெண்டனிட்டு வேடிக்கை பார்க்கும். நிச்சயமாக விசில் ஊதி கை தட்டாது.


Shekar
ஜூலை 04, 2024 09:42

2026 ல நம்ம தட்டுல இந்த மவராசன் தன் அடிமைகளோடு மொத்தமா பிச்சைபோடணும்ல.


GSR
ஜூலை 04, 2024 08:55

இப்பொழுதும் இந்துக்களாக இருப்பவர்கள் யார்? அவர்களுடைய கடந்த தலைமுறையினர் யாருமே மிரட்டலுக்கோ கோதுமைகோ மதம் மாறாமல் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் வழி வந்தவர்கள் மட்டுமே இன்றும் இந்துக்களாக இருப்பவர்கள்


Jambavaan
ஜூலை 04, 2024 08:52

இவனுக போட்ட பிச்சையில் வந்ததுதானே இந்த அரசு. திருட்டை முன்னேற்றும் கழகத்திடம் நியாயம் எதிர் பார்க்கக் கூடாது.


Sampath Kumar
ஜூலை 04, 2024 08:43

ஹிந்துக்களின் மத உணர்வை தூண்டுவதாக அய்யா என்னக்கு ஒரு சந்தேகம் மத உணர்வை தானே தூண்டி விட்டாரு அது நல்ல விஷயம் இல்லையா அடுத்த மதத்தினர் நம் மதத்தின் உணர்வை துடுகிறார் என்றால் என்ன அர்த்தம்?/ நல்ல விஷத்தை பொய் பொல்லாது என்று சொல்லுகிறார்களே ஹி ஹி


Shekar
ஜூலை 04, 2024 09:39

நீ உப்பு போட்டு சாப்பிட்டு எதனை வருஷம் ஆகிறது.


ganapathy
ஜூலை 04, 2024 11:02

பெரியாரின் சிறுநீரால் ஞானஸ்னானம் பெற்றவனால் மட்டுமே இப்படிப்பட்ட கருத்தை எழுதமுடியும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை