உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு தரப்பு ஆட்கொணர்வு மனு வழக்கமான முறைப்படி விசாரணை

சவுக்கு தரப்பு ஆட்கொணர்வு மனு வழக்கமான முறைப்படி விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மகளிர் போலீசாரை விமர்சித்ததாக, 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில், அவர் கைது செய்யப்பட்டார். பின், கஞ்சா வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சங்கர் காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சங்கரின் தாய், ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.மனு, விடுமுறை கால நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை, ரத்து செய்து, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். போலீஸ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதித்து, இறுதி விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு சென்றது.ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்க உரிய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார்.போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ''கைதானவர் தரப்பில் அளிக்கும் மனுவை விசாரித்த, ஓய்வு நீதிபதிகள் அடங்கிய அறிவுரை குழுமம், இன்னும் தன் முடிவை தெரிவிக்கவில்லை. மேலும், இந்த வழக்கில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது,'' என்றார். சவுக்கு சங்கர் சிகிச்சை பெற, அவரை தற்காலிகமாக விடுவிக்கக் கோரி, இடைக்கால மனுத் தாக்கல் செய்திருப்பதாக, மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்தார்.இதையடுத்து, இந்த ஆட்கொணர்வு வழக்கு, வழக்கமான நடைமுறைப்படி விசாரிக்கப்படும் என்பதால், அதன்படி பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர். இடைக்கால நிவாரணம் கேட்டு, புதிதாக அரசிடம் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nallavan
ஜூன் 13, 2024 10:14

இவர் தேர்தல் கருத்துக்கணிப்பு போலவே முப்பத்தி ஒன்பது தொகுதியிலும் அண்ணா தி மு க வெற்றி பெற்றது, அண்ணாவின் நாமம் வாழ்க


Velan Iyengaar
ஜூன் 13, 2024 08:35

ஒரு ப்ளாக்மைல் போலி பத்திரிகையாளன்... கவனிப்பு வரும் பக்கம் பேசும் அயோக்கியன்.. யாருக்கும் நேர்மையாக இருக்க முடியாத ஒரு களவாணி.. அவன் மீது வழக்கு.. அந்த பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் சமயத்தில் இவன் நடந்துகொண்ட விதம் ஊர் அறிந்தது.. அப்போதே இவனை தூக்கி உள்ளே போட்டிருக்கவேண்டும் ...இவனுக்கு இப்போதாவது ஒரு சுமாருக்கு தண்டனை கிடைத்ததே என்று சந்தோஷப்படுங்கள்... .. இவன் ஒன்றும் தியாகி அல்ல.. கடைந்தெடுத்த அயோக்கியன்... கபடதாரி ......மொள்ளமாரி .....இவனுக்கு குண்டாஸ் கூட போதுமானது இல்லை .....


Kasimani Baskaran
ஜூன் 13, 2024 12:19

திராவிட மாடல் அடிமைகள் தரக்குறைவாக விமர்சிக்கும் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்து இருக்கிறாரா


Velan Iyengaar
ஜூன் 13, 2024 08:29

இரண்டு பேர் அழுத்தம் தந்தார்கள் என கூறும் ஸ்வாமிநாதன் யார் அந்த ரெண்டு பேர் என்று அடையாளமாவது காட்டுவாரா? இல்லை அந்த ரெண்டு பேரும் கற்பனை கதாபாத்திரங்களா? நேர்மையான நீதிபதிகள் அப்படி அழுத்தம் தந்தவர்களை அடையாளம் காட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்... யாருக்கும் அஞ்சமாட்டார்கள்.. சரியான தொடைநடுங்கி தயிர் சாதமா இருப்பாரோ இந்த நீதிபதி ???


Kasimani Baskaran
ஜூன் 13, 2024 06:19

நீதிமன்ற காவலில் இருக்கும் ஒரு கைதியின் கையை உடைத்து விட்டு என்னவெல்லாம் சட்டம் பேசுகிறது நீதித்துறை. இது வெளங்க வாய்ப்பில்லை. கவர் வாங்கிவிட்டால் வாயை மூடி மெளனம் காக்கவேண்டும் என்பது அந்த ஊடகங்களின் விதி போல இருக்கிறது.


Velan Iyengaar
ஜூன் 13, 2024 08:31

கவர் வாங்கி அழுத்தம் அந்த இருவர் கோரிக்கையை எப்படி கபடத்தனத்துடன் நிறைவேற்றி இருக்கிறார் என்று கவனியுங்கள் ... சீக்கிரம் விசாரிக்காதீர் என்பது தான் அழுத்தம் தந்தவர்கள் ஆசை .. சாதாரணமாக விசாரித்து நேரத்தே முடித்துவைத்திருக்கக்கூடிய வழக்கு இப்போது எத்தன சுத்து சுத்துகிறது என்று கவனியுங்கள் .... அப்போ முதலில் வாங்கிய கவர் பிரமாதமாக வேலை செய்கிறதா இல்லையா ???


Bala Paddy
ஜூன் 13, 2024 05:42

தமிழ் நாடு சாமானியர்களுக்கு நரகம். இந்த திருட்டு திராவிடிய ஆட்சியில் எல்லோரும் நாசமா போங்கடா. நீதி துறையும் கேவலமாக ஆகி விட்டது. இனி மோடி மனது வைத்தால் உண்டு.


Velan Iyengaar
ஜூன் 13, 2024 08:32

ஸ்வாமிநாதன் போன்ற ரெண்டு பக்கமும் கட்டிங் வாங்கி நீதிபரிபாலனம் செய்பவர்களால் நீதித்துறை கேவலமாகிவிட்டது .....


Naga Subramanian
ஜூன் 13, 2024 08:33

மோடியை பல சமயங்களில் அவதூறாக பேசியவர் இவர். தாங்கள் சொல்வது எப்படி நடக்கும்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை