உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுத்தேர்வில் தொடர்ந்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி சகோதரியர்

பொதுத்தேர்வில் தொடர்ந்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி சகோதரியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மணலி, : மணலி, பல்ஜி பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், பொக்லைன் வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம் வைத்துள்ளார். இவரது மனைவி டில்லிராணி. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.மகள்கள் ஹேமதாரணி மற்றும் ஹேமஸ்ரீ, இரட்டையர் ஆவர். பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான இருவரும், தேனாம்பேட்டை, சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில், பிளஸ் 2 படித்து தேர்வெழுதினர்.'பிரெய்லி' முறையில் படித்து, தேர்வை எதிர்கொண்ட நிலையில், ஹேமதாரணி, கணினி அறிவியலில் 100க்கு 100 எடுத்தார். தமிழ், புவியியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களில், 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில், 73 என, 569 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.ஹேமஸ்ரீ, கணினி அறிவியல், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களில், 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வரலாற்று பாடத்தில் 98, தமிழில் 92, ஆங்கிலத்தில் 79, உட்பட, 566 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் மூன்றாமிடம் பிடித்தார். ஹேமஸ்ரீ 10ம் வகுப்பில் 452 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும் பிடித்திருந்தார்.அதே போல், ஹேமதாரணி பத்தாம் வகுப்பில் 449 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாமிடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. கல்விக்கண்ணால் பெரும் சாதனை படைத்திருக்கும் இரட்டை சகோதரியர், இருவருமே எதிர்காலத்தில், பி.ஏ., ஆங்கிலம் படித்து, ஐ.எப்.எஸ்., அதிகாரியாக வேண்டும் என, விருப்பம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

BalaG
மே 14, 2024 02:44

கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள்


சாதிக் ஐஷ்வர்யன், நேமம்
மே 13, 2024 11:47

வாழ்த்துகள் குழந்தைகளே! உங்கள் எண்ணம் போல உன்னத நிலையை அடைய கடவுள் அருள்புரிவாராக!


KrishnaKumar
மே 13, 2024 11:34

வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரிகளே


Sureshkumar
மே 13, 2024 10:02

உங்களது லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்


vidhu
மே 13, 2024 09:55

மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்


Subramanian
மே 13, 2024 06:58

வாழ்த்துகள்


D.Ambujavalli
மே 13, 2024 06:34

குழந்தைகளுக்கும், அவர்களால் பெருமை பெறும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்


Sridhar venkat
மே 13, 2024 07:24

How to help/assist for future education. Please provide details to my email if needed. Thank you Dinamalar for your sharing these kinds of great high achieving kids.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி