உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி பா.ஜ., மீது திருமா புகார்

பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி பா.ஜ., மீது திருமா புகார்

சென்னை:''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்த, சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.,வுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்த, சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.,வுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது.எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும், ஒரு அரசியல் செயல்திட்டம் இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கிறோம்.இதுபோன்ற விவகாரங்கள் விசாரணைக்கு உரியவையாக உள்ளன. அவர்களின் அரசியல் செயல்திட்டம் என்பது, தி.மு.க., அரசுக்கு எதிராக, இங்கு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; சட்டம் -- ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. அதற்கு துணையாக, பல அமைப்புகளும் செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது.சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய சமூக விரோதிகளை, அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடியவர்களை கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pv, முத்தூர்
ஜூலை 13, 2024 11:19

இதுவே வேறு ஆட்சி இருந்தால், பல பேராட்டங்களை நடத்தியிருப்பார். இப்ப இவர் கண்களுக்கு இனம் எல்லாம் தெரியாது. சுயநலவாதிகள். மக்கள் உனர்ந்து கல்வியால் உயரவேண்டும், ஜாதி பின்னால் போகாமல்.


N Sasikumar Yadhav
ஜூலை 13, 2024 07:50

டெல்லியில் இருந்து கொண்டே தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க முடியும் என சொன்ன திருமாவளவன் இதுபோல பொய்யை பாஜகமீது சுமத்தக்கூடாது


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி