உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று அக் ஷய திருதியை: நள்ளிரவு வரை கடை உண்டு

இன்று அக் ஷய திருதியை: நள்ளிரவு வரை கடை உண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இதனால், விரும்பிய நகைகளை வாங்க பலரும் நகை கடைகளுக்கு படையெடுப்பர். அவர்களின் பாதுகாப்பிற்காக, நகை கடைகள் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தங்க நகைகள் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகம் உள்ளது. அக் ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. அக் ஷய திருதியை முன்னிட்டு, 'தங்கம் வாங்கினால் 1 கிராமுக்கு அதிக தள்ளுபடி, தங்க நாணயம் இலவசம்' என, பல்வேறு சலுகைகளை நகை கடைகள் அறிவித்துள்ளன.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,000 ரூபாயை தாண்டியது. பின்னர், தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று கிராம் தங்கம், 6,615 ரூபாய்க்கும்; சவரன், 52,920 ரூபாய்க்கும் விற்பனையானது. அக் ஷய திருதியைக்கு தங்க வாங்க, பலரும் நகை கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, மாதம், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் செலுத்தி வந்தனர். அவர்கள், தங்களின் சேமிப்பு பணத்தில் விரும்பிய நகைகளை தேர்வு செய்து, முன்பதிவு செய்து வந்தனர். நேற்றும் பலர் முன்பதிவு செய்தனர். இதனால், நகை கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. முன்பதிவு செய்த பலரும், அக் ஷய திருதியை முன்னிட்டு இன்று முதல் நகைகளை வாங்க, நகை கடைகளுக்கு படையெடுப்பர். இதனால், கடைகளில் கூட்டம் அலைமோதும்.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி நகை கடைகளுக்கு வந்து செல்ல, உரிய பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வெயில் வெப்பத்தில் இருந்து தணிக்க, வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், மோர், பழரசம், குளிர்பானம் வழங்கப்படுகின்றன; சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. இரவில் நகை வாங்குவோர், பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்ல, நகை கடைகளின் சார்பில் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.அக் ஷய திருதியைக்காக, பல்வேறு புதிய வடிவங்களில் நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பலரும் எடை குறைவான நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை, கடந்த ஆண்டை விட 25 - 30 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
மே 10, 2024 15:13

கடைவீதியில் நகை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. ஒரு கிராம் நகை வாங்க மொத்த குடும்பமே வருகிறது.. காபி, பலகாரம் எல்லோருக்கும் உண்டு ....


RAAJ68
மே 10, 2024 13:34

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்களை மூளை சலவை செய்து மூட நம்பிக்கையை திணித்து பணம் பார்க்கும் நகை கடை காரர்கள் கொண்டாடும் நாள்.


RAAJ68
மே 10, 2024 13:32

வசதி உள்ளவர்கள் தெருவில் வசிக்கும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் நாள்தான் இன்று. தங்கம் வாங்கி நகை கடைக்காரனை மேலும் கோடீஸ்வரனாக்காதீர்கள். இன்றைய தினம் கோவிலுக்கு போகலாம் ஆனால் உண்டியலில் காசு போடாதீர்கள். அது ஆண்டவனுக்குச் சேருவதில்லை. தேவைப்படும் இரண்டு பேருக்காவது சாப்பாடு வாங்கித் தரலாம்.


தத்வமசி
மே 10, 2024 11:51

அட்சிய திருதீயை என்பது வடநாட்டில் கொண்டாடப்படும ஒரு பண்டிகை இன்று இமாலயத்தின் மேல் உள்ள பதிர்நாத், கேதார்நாத் போன்ற திருத்தலங்களில் உள்ள கோவில்கள் குளிர் காலத்திற்குப் பிறகு இன்று தான் திறக்கப்படும் தீபாவளியன்று கடைசியாக பூஜை செய்து கோவில்களை பூட்டுவார்கள், பனிக் காலத்திற்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பார்கள் அதனால் மக்கள் யாத்திரை செல்ல தொடங்குவார்கள் அது போல சீக்கிர்யர்களும் யாத்திரை கிளம்புவார்கள் ஹெம்குண்டு சாஹிப் எனும் அழகிய பிரதேசம் ஹெமகுந்த் ஏரியின் மீது இமயமலையில் மீது அமைந்துள்ளது இது சீக்கியர்களின் புண்ணிய இடம் இங்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சீக்கியர்கள், இந்துக்கள் வந்து செல்வார்கள் இது பாண்டுகேஷ்வர் எனும் புண்ணிய க்ஷேத்திரம் அருகில் உள்ளது ஆக, புண்ணிய தீர்த்த யாத்திரை செல்லும் காலம் இது தவிர பனிக்காலம் முடிந்து அனைவரும் தங்களின் வேலைகளை தீவிரமாக தொடங்குவார்கள் வெளியில் வேலைவாய்ப்பு தேடிச் செல்வார்கள் தானம் கொடுப்பது சிறந்தது வெளியில் செல்பவர்கள் தானம் வழங்குவார்கள் ஆனால் இந்த அட்சய திருதீயை எனும் பண்டிகையை இதை வர்த்தகர்கள் தங்களுக்கு சாதகமாக திருப்பி விட்டுக் கொண்டனர் மக்களும் அதை அப்படியே பின் பற்றுகின்றனர் பணம் இருப்பவர்கள் எதையும் செய்யலாம்


RAJ
மே 10, 2024 08:05

அட அப்ரெசெண்டுகள, இன்னுமாடா ஏமாறுவீங்க


Muguntharajan
மே 10, 2024 07:00

அட்சய திருதியை மக்களை ஏமாற்றி கொள்ளை லாபம் பார்க்கும் நகைக்கடை வியாபாரிகளின் தந்திரம் மக்கள் இதை நம்பாமல் புறக்கணிக்க வேண்டும் சில மாதங்களுக்கு யாரும் தங்கம் வாங்க நகைக்கடை பக்கம் போகக்கூடாது அப்போது தான் தங்கம் விலை குறையும்


D.Ambujavalli
மே 10, 2024 06:28

இந்த 'தங்க த்ரிதியை' பித்தம் யாருக்கு வளர்ச்சி அளிக்கிறதோ இல்லையோ, நகை வியாபாரிகளுக்கு ஜாக் பாட் அடிக்கிறது சந்தடி சாக்கில் சின்ன ஐட்டங்களான தோடு , மூக்குத்தி போன்றவற்றில் காரட்டை 'நுழைந்துவிடும்' செயலும் நடக்கும் முன் காலத்தில், ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கூட இந்த தங்க பைத்தியம் இருக்கவில்லை அன்று செய்யும் தானங்களுக்குப் பல மடங்கு பலன் உண்டு என்றும் தர்ப்பணம் போன்ற வழிபாடுகளையும் தான் செய்து வந்தனர் மஹாலக்ஷ்மி கடல் மக்கள் ஆனதால் கடல் விளைச்சலான உப்பு வாங்குவோம் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்புக், பேனா வழங்கும் வழக்கம் உண்டு இன்று பாஞ்சாலிக்கு ஆடை வளர்த்த தினம் என்பதால் புத்தாடை உடுத்துவோம்


Mani . V
மே 10, 2024 06:09

நள்ளிரவு வரையில் ஏமாற அரியதோர் வாய்ப்பு நகைக்கடை முதலாளிகளை கோடீஸ்வரர்கள் ஆக்க ஏமாளி மக்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம்


குமரி குருவி
மே 10, 2024 06:03

தீபாவளி போன்ற விஷேச நாட்களில் விடிய விடிய டாஸ்மாக் திறக்க சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் விடியல் அரசு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை