உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி பேசும் ரயில்வே ஊழியர்களுக்கு தென்மாநில மொழிகள் பேச பயிற்சி

ஹிந்தி பேசும் ரயில்வே ஊழியர்களுக்கு தென்மாநில மொழிகள் பேச பயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ஹிந்தி மொழி மட்டும் தெரிந்துள்ள ரயில்வே பணியாளர்களுக்கு, அந்தந்த ரயில் கோட்டங்களுக்கு ஏற்றார்போல், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேச பயிற்சி அளிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே துவக்கி உள்ளது.தெற்கு ரயில்வே, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா மற் றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு சில பகுதிகள் என 5,087 கி.மீ., துாரத்திற்கு ரயில்களை இயக்கி வருகிறது. 300 விரைவு ரயில்கள் உட்பட, 1000த்துக்கும் மேற்பட்ட ரயில் சர்வீஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. 21.50 லட்சம் பேர் தினமும் பயணம் செய்கின்றனர்.ரயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிக பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 90,000த்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில், 50 சதவீதம் பேர், பயணியரிடம் நேரடியாக தொடர்பு உள்ளவர்கள். இவர்கள் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.தெற்கு ரயில்வேயில் ஹிந்தி மொழி பேசும் பணியாளர் எண்ணிக்கை, 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழிகளில் பேசினால் பேசவும், புரிந்துகொள்ளவும் முடியாது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் ரயில் பயணியருக்கு தடையின்றி தகவல் அளிக்க, அந்தந்த கோட்டத்தில் பயன்பாட்டில் உள்ள உள்ளூர் மொழியை கற்றுக் கொள்ள தெற்கு ரயில்வே குறுகிய கால பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, ஹிந்தி மட்டுமே தெரிந்த பணியாளர்களுக்கு உள்ளூர் கோட்டங்களுக்கு ஏற்ப, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியை பேச உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 'பாஷா சங்கம்' செயலி வாயிலாக, பயிற்சி எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Syed ghouse basha
மே 11, 2024 15:49

இதுதானே சொல்கிறோம் தமிழ் நாட்டில் அந்த அந்த மாநிலங்களில் காலி பணியிடத்திற்கு மத்திய அரசு வேளைக்கு தனியாக தேர்வு வையுங்கள் தமிழர்களை வேளைக்கு எடுங்கனும் நீட் தேர்வால் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் கூடாதுன்னு சொல்றோம் இதை சொன்னா தேசபக்தினு ஒரு கூட்டம் கிளம்பிரும்


டண்டணக்கா
மே 11, 2024 19:52

பாய், நீங்க ஒழூங்கா நீட் எழுதினா வட நாட்டவன் ஏன் இங்க வரப்போறான். நீட்ட விலக்குறோம் ஊர ஏமாத்திற கும்பல நம்பிகிட்டு நீங்க எழுதாம இருந்தா அவன் வரத்தான் செய்வான்


சோழன்
மே 11, 2024 07:58

தென்மாநிலத்தவர்களுக்கு ஆப்பு.


Loganathan Kuttuva
மே 11, 2024 07:37

ஹிந்தி பேசும் ஊழியர்கள் வடமாநிலங்களுக்கு இடமாறுதல் வாங்கிக்கொண்டு அங்கு சென்றுவிடுவார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை