| ADDED : ஜூன் 26, 2024 03:44 AM
சென்னை : “அரசு நிலங்களில் மரங்களை வெட்டுதற்கு விரிவான விதிமுறைகளை வகுத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க, தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் - 2024 இயற்றப்படும்,” என, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:l ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்l கோவையில் உள்ள வன உயர் பயிற்சியக மரபியல் பிரிவில், விதை நிலைதன்மையை பாதுகாக்கவும், ஆண்டு முழுதும் நடவு செய்வதற்கு விதைகளை வழங்கவும், 'கிரயோஜெனிக்' குளிர்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு பெட்டகம், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்l அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரங்களை வெட்டுதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க, தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் --- 2024 இயற்றப்படும்l வனங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காடுகளை மீட்டெடுப்பதில் புதிய பரிமாணங்கள் அடைவதற்கும், புதிய மாநில வனக்கொள்கை வெளியிடப்படும்l சமீபத்தில் மறைந்த நாட்டின் தலைசிறந்த வன பாதுகாப்பு ஆர்வலர் ஏ.ஜே.டி.ஜான்சிங் பெயரில், 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வன உயிரின பாதுகாப்பு விருது வழங்கப்படும்l நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வான் பூங்கா அமைக்கப்படும்l கூடலுார் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 'ஆர்க்கிட்டேரியம்' எனும் மரங்களில் தொற்றி வளரும் அழகான பூக்கும் தாவரங்கள், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்l தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள 40 மலையேற்ற வழித்தடங்களின் வரைப்படங்கள் உருவாக்கப்படுவதுடன், தேவையான அடிப்படை வசதிகளும், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.