உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா சாக்லேட் பறிமுதல் கோவையில் இருவர் கைது

கஞ்சா சாக்லேட் பறிமுதல் கோவையில் இருவர் கைது

கோவை: பீஹார் மாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லேட்கள் கடத்தி வந்து, துடியலுார் வெள்ளக்கிணறு பகுதியில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு நடத்திய சோதனையில், 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த இருவரை கைது செய்து, போலீசார் விசாரித்தனர்.அவர்கள், பீஹார் மாநிலம், சிரினிய தாபாகாவை சேர்ந்த ராம்நந்த் சாக்னி, 23, மிர்சாபூரை சேர்ந்த ராஜ்வூசாக்னி, 21, என, தெரிந்தது.வெள்ளக்கிணறில் உள்ள ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்த இருவரும், பீஹார் மாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லேட் வாங்கி வந்து, 100க்கும் மேற்பட்டோருக்கு வினியோகம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை