உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; ஆளும்கட்சிதான் ஜெயிக்குமா ?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; ஆளும்கட்சிதான் ஜெயிக்குமா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு துவங்கியது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும் என்பது இந்த தேர்தலில் நிரூபணமாகும் என நம்பப்படுகிறது. முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களில் தி.மு.க., முன்னிலை வகிக்கிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ம் தேதி நடந்தது. தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட, 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்தது. ஜூலை 10ம் தேதி, காலை ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து, மாலையில் முடியும் வரை 'மளமள'வென ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் ஓட்டளித்தனர். 82.48 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(ஜூலை 13) காலை 8 மணிக்கு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Swaminathan L
ஜூலை 13, 2024 11:43

ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும். அது தான் தற்கால ஜனநாயகத்தின் உத்தரவாதம் கூட.


T.sthivinayagam
ஜூலை 13, 2024 11:12

அதிமேதாவிகள் சூது ராஜதந்திரம் இறைவனால் தோற்க்கடிக்க படும்


anuthapi
ஜூலை 13, 2024 09:35

150000 வாக்குகள் வித்யாசத்தில் நிச்சயமாக வெற்றி. 11.00 மணிக்கெல்லாம் தெரிந்து விடும். வாழ்க திராவிட மாடல்.


Godyes
ஜூலை 13, 2024 09:16

தபால் ஓட்டுக்களில் பணம் கைமாறி இருக்கும்.


Velan
ஜூலை 13, 2024 09:16

தீய சக்தி தான் வரும்


Godyes
ஜூலை 13, 2024 09:15

சரியாக சிந்திக்க முடியாத அவசர வயது பதினெட்டு. இவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தால் ஆட்சிக்கு வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள்.


Barakat Ali
ஜூலை 13, 2024 08:53

பணமழை ன்னு நீங்களே செய்தி போட்டீங்களே


SP
ஜூலை 13, 2024 08:43

முடிவு தெரிந்தது தான் ,இந்த இடைதேர்தலே நடத்தியிருக்கவேன்டாம்.


Gopala Krishnan
ஜூலை 13, 2024 08:25

பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இது எங்க நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த மகத்தான பரிசு, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றிக்கு கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சுரணை இல்லாம சொல்லுவாங்க.....!!!


குமரி குருவி
ஜூலை 13, 2024 08:22

ஆளுங்கட்சி தி.மு.க.வென்றால் பண நாயகத்திற்கு வெற்றி எதிர்க்கட்சி வென்றால் ஜன நாயகத்திற்கு வெற்றி


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ