உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறோம்: கார்த்தி எம்.பி., பேட்டி

மக்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறோம்: கார்த்தி எம்.பி., பேட்டி

சிவகங்கை: தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், மக்கள் மீது நம்பிக்கை வைத்து தான் 'இண்டியா' கூட்டணி தேர்தலை சந்தித்து வருகிறது என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கர்நாடகாவில் காங்., கட்சிக்கு பெண்களிடம் வரவேற்பு உள்ளது. திருநெல்வேலியில் காங்., மாவட்ட தலைவர் மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு ஒருவர் மீது தாக்குதல், கொடுக்கல் வாங்கல் தகராறு போன்ற பிரச்னைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது. மத, இன கலவரத்திற்கு மட்டுமே அரசு பொறுப்பேற்க முடியும். தனி நபர் பிரச்னையால் ஏற்படும் மோதலை தடுக்க முடியாது. திருநெல்வேலி காங்., தலைவர் கொலை தொடர்பாக தமிழக போலீசார் பாரபட்சமின்றி விசாரணை செய்வார்கள். தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவார்கள். சிவகங்கை தொகுதியில் ஆண்களை விட 85,023 பெண்கள் அதிகளவில் ஓட்டு அளித்துள்ளனர். தமிழகத்திலேயே பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டது சிவகங்கையில் தான்.

வாக்காளர் பெயர் நீக்குவது தவறு

வாக்காளர் பட்டியலில் இருந்து பொது அறிவிப்பு வெளியிடாமல் பெயர்களை நீக்கக்கூடாது.தமிழ்நாட்டில் போதை பொருட்கள் புழக்கம் என்று கூறுவது சமுதாய பிரச்னை. இதை நோயாக பார்த்து மறுவாழ்வு மையம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மறுவாழ்வு மையங்கள் அமைக்க மாநில அரசுக்கு, மத்திய அரசு நிதி வழங்குவதை குறைத்துவிட்டது. போதை பொருட்களை சப்ளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விற்பனையை தடுக்க வேண்டும். சிவகங்கை அருகே உப்பாறு ஆற்றில் இருந்து ஊற்று தோண்டி குடிநீர் எடுப்பதை கேள்விப்பட்டேன். கலெக்டரிடம் பேசி அவர்களுக்கு தடையின்றி தரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷன் நடுநிலையாக இல்லை. பா.ஜ., வின் பொய் பிரசாரம் குறித்து புகார் அளித்தால், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதில்லை. தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், மக்கள் மீது நம்பிக்கை வைத்து இண்டியா கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. இந்துார், சூரத் தொகுதியில் காங்., வேட்பாளர்களை வாபஸ் பெற செய்தது வருத்தம் அளிக்கிறது. இது காங்., கட்சிக்கு பின்னடைவு தான். காந்தி நகரில் 14 சுயே., வேட்பாளர் வாபஸ் பெற்றதை அறிந்தேன். இது போன்று ஆளும் கட்சி அழுத்தம் கொடுப்பதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்ப்பது ஏன் என தெரியவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ