உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேனாவுக்கு பதில் அரிவாள் ஏன்?

பேனாவுக்கு பதில் அரிவாள் ஏன்?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இரு தரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற சிவகுமார் என்ற ஆசிரியரின் தலையில், ஒரு மாணவர் அரிவாளால் வெட்டியதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, கைக்கெட்டும் தொலைவில் கஞ்சா கிடைப்பதை அனுமதித்துவிட்டு, மாணவர்களை மட்டும் இத்தகைய சீர்கேடுகளுக்கு பொறுப்பாக்குவது சரியானது அல்ல. பேனாக்களை எடுத்துச்செல்ல வேண்டிய வயதில், அரிவாளுடன் செல்வது ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். இந்த விஷயத்தில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kesavan
ஆக 05, 2024 18:22

வன்முறைக் கூட்டத்தின் தலைவன் பேசுகிற பேச்சா இது பிறந்தநாள் விழாவில் அண்டம்நடுங்க போகுது ஆட்சியாளர்கள் ஆட்சி விட்டு ஓடப் போகிறார்கள் அப்படி ஒரு போராட்டம் நடக்கப் போகிறது உலகமே இதை அதிர்ச்சியோடு பார்க்கப் போகிறது என்று உசுப்பேத்தியே நீ எல்லாம் இதை பத்தி பேசலாமா போடா போடா


Kesavan
ஆக 05, 2024 18:20

இதை பாருடா சாத்தான் வேதம் ஓதுவதை கந்தன் நடுங்கபோது உலகம் ஆடப்போது ஊமை பேசப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு ஓடப் போகிறார்கள் என்றும் உசுப்பேத்தி யோக்கினாட்டம் கேள்வி கேட்கிறான் க


k Venkatesan
ஜூலை 31, 2024 11:01

ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப் படாததால் போராட்டம் செய்கிறார்கள். இதனால் இவர்கள் மீது இருக்கும் மதிப்பு பொதுமக்களிடம் மற்றும் மாணவர்களிடம் குறைகிறது. MORALE INSTRUCTION PERIODAI நீதி போதனை வகுப்பு கட்டாயமாக்க வேண்டும். தனி மாணவன் தவறு செய்ய பயப்படுவான். எனவே ஒரு GANG ஆக இருக்கும் மாணவர்களை கண்காணித்தல் வேண்டும். இவர்கள்தான் நாளைய இந்தியாவின் சிற்பிகள் என்பதை சாதித்த மாணவர்களை, அதிகாரிகளை அழைத்து மாணவர்கள் முன்னிலையில் பேச வைக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். ஆசிரியர் பணி மகத்தானது, உன்னதமானது. அவர்களை மதிப்போம், மரியாதை செய்வோம்.


sankaranarayanan
ஜூலை 31, 2024 10:36

பேனாவும், அரிவாளும் கட்சி சின்னங்கள்தான் அவைகளைத்தான் பள்ளி மாணவர்கள் கையிலேந்து சென்றார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது


Mohan
ஜூலை 31, 2024 10:32

Because it was educated by you lizard


MP.K
ஜூலை 31, 2024 09:16

மாணவ-ஆசிரியர் உறவில் பிணக்கு பகை முற்றி கொலை முயற்சிக்கு வித்திடுவது என்ன என்பதை ஆராய வேண்டும், முறையான விசாரணை வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை