உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையை விட, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு, தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத கார்டுதாரர்களுக்கும், ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கும், ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. லிட்டர் மண்ணெண்ணெய் விலை, 15 ரூபாய் - 16.50 ரூபாய்.

தலா 2 - 3 லிட்டர்

தமிழக கார்டுதாரர்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அதன்படி, 2021 ஏப்ரலில் மாதந்தோறும், 75.36 லட்சம் லிட்டர் ஒதுக்கப்பட்டது. இது, 2022 ஏப்ரல் முதல் மாதம், 45.20 லட்சம் லிட்டராகவும்; 2023 ஏப்ரல் முதல் மாதம், 27.12 லட்சம் லிட்டராகவும் குறைக்கப்பட்டது. இதனால், கார்டுதாரர்களுக்கு தலா, 2 - 3 லிட்டர் வரை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டிற்காக இம்மாதம் முதல் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, 10.84 லட்சம் லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, தமிழகத்தில் சமையல் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

குறை கூறக்கூடாது

இதுகுறித்து, மத்திய பொது வினியோக திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதே சமயம், காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.40 கோடி. மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக காஸ் இணைப்பு இல்லாத ஏழை பயனாளிகளை கண்டறிந்து, புதிய காஸ் இணைப்பு வழங்குகிறது. இதனால்தான், தமிழகத்திற்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது குறை கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

'ஒரு லிட்டர் கூட தர முடியாது'

தமிழக உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் காஸ் சிலிண்டர் இணைப்புகள் அதிகம் இருப்பதால், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் காரணம் ஏற்புடையது தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், 4 - 5 காஸ் இணைப்புகளை பெற்றிருப்பதால், மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.ஆனால், தமிழகத்தில் தற்போது, 30 லட்சம் பேர் காஸ் இணைப்பு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தலா ஒருவருக்கு, 2 லிட்டர் என்றாலும், 60 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வேண்டும். கடந்த ஆண்டில், 27 லட்சம் லிட்டர் வழங்கிய நிலையில், தலா ஒரு லிட்டர் வழங்கப்பட்டது. அதைவிட இந்தாண்டு ஒதுக்கீடு குறைந்துள்ளது. இதனால் ஒரு குடும்பத்திற்கு, ஒரு லிட்டர் கூட தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajathi Rajan
ஏப் 28, 2024 12:53

இதுல என்ன இருக்கு, தமிழகத்தை வஞ்சிப்பது தானே, தமிழை வஞ்சிப்பது, தமிழனை வஞ்சிப்பது பிஜேபி கொள்கை


Puratchi Veeran
ஏப் 28, 2024 12:40

யாருடா இவனுங்க


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 28, 2024 11:32

தமிழக உணவுத்துறை அதிகாரி தமிழக மக்கள் முட்டாள்கள் என்றும் அதிகாரிகள் மந்திரிகள் அறிவாளிகள் போலவும் நினைத்து கொண்டு உள்ளார் ஒரே குடும்பத்தில் ஜந்து கேஸ் வைத்து உள்ளார்கள் என்றால் அதற்குரிய ஆவனங்களை கொடுத்தது உங்கள் அரசு அதிகாரிகள் தானே உணவுத்துறை அதிகாரி ஏன் அது போன்ற தனக்கு தெரிந்த நான்கு அல்லது ஜந்து கேஸ் கனெக்சன் வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து கனெக்சன்களை திரும்ப பெறலாமே முப்பது இலட்சம் பேர் கேஸ் கனெக்சன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் இவர் அந்த முப்பது இலட்சம் பேரை கண்டுபிடித்து அவர்களுக்கு கேஸ் கனெக்சன் வாங்கிக் கொடுக்க கூடாது இப்பொழுது தானே மத்திய அரசு பெண்களுக்கு இலவச கேஸ் கனெக்சன் தருகிறது அதை வாங்கிக் கொடுத்து திமுக ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கலாமே என் இவர் செய்யவில்லை


venugopal s
ஏப் 28, 2024 11:02

என்ன பெரிய புண்ணாக்கு காரணம், தமிழக மக்கள் மீது உள்ள வெறுப்புணர்வு தான் காரணம்! எல்லா விஷயங்களிலும் தமிழகத்தை வஞ்சித்தவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்!


enkeyem
ஏப் 28, 2024 10:41

இன்னும் பலர் ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்க மறுத்து வருகிறார்கள் ஆதார் இணைக்கப்பட்டால் அவர்கள் குறுக்குவழியில் பெற்றுள்ள போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு விடுமே


sahayadhas
ஏப் 28, 2024 10:31

தமிழ்நாட்டுக்கு மண்ணும் கிடைக்காது


GMM
ஏப் 28, 2024 09:08

ஒரு குடும்பம் நான்கு, ஐந்து காஸ் இணைப்பு பெறுவது கடினம் தற்போது தலைவர், முகவரி, ஆதார், செல் போன் விவரம் ஆன்லைன் கண்டுபிடிக்க எளிது தண்டனை குறைவு குற்றம் அதிகரிப்பு சுற்று சூழல் பாதுகாக்க காஸ் இல்லாதவர் இணைப்பு பெற வாய்ப்பு ஒரே நாடு ஒரே ரேஷன் போலிகள் காண உதவும் மண்ணெண்ணெய் தேவைக்கு தமிழக ரேஷன் விவரம் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து கோரிக்கை வைக்க வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 28, 2024 07:47

நுகர்வோரின் தேவைக்கு அதிகமாக கொடுத்தால் அது கள்ள மார்க்கெட்டுக்கே சென்று விடும்


ramani
ஏப் 28, 2024 07:42

விடியாத அரசு எப்படி எல்லாம் அடிக்க முடியுமோ அடிக்கும்


R.RAMACHANDRAN
ஏப் 28, 2024 06:47

ஆக ஏறி வாயு இணைப்பு வழங்குவதிலும் இந்த நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்கின்றனர்குடுமப அட்டை ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேல் லஞ்சம் வாங்கிக் கொண்டு வழங்கியுள்ளார்கள்இலவச எரிவாயு இணைப்பும் லஞ்சம் வாங்கிக் கொண்டு குடும்ப அட்டை இல்லாதவர்கள் ஏற்கெனவே இணைப்பு ஆண்கள் பெயரில் வைத்திருப்பவர்கள் என வாக்கு வங்கிக்காக போட்டி போட்டுக் கொண்டு வழங்கி உள்ளனர்எதிரி கட்சியை சேர்ந்த அரசியல் வாதிகளின் ஊழல்களை மட்டுமே துருவி துருவி ஆராய்ந்து அவர்களை ஒடுக்குபவர்கள் ஆளும் அதிகார வர்கத்தின் ஊழல்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை