உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி மாநாடு அனுமதி கிடைக்குமா?

விஜய் கட்சி மாநாடு அனுமதி கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: த.வெ.க., மாநாடு தொடர்பாக போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான விளக்கம், விழுப்புரம் டி.எஸ்.பி.,யிடம் நேற்று அளிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க.,வின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த அனுமதி கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த 28ல், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.அன்று மாலையே ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் போலீஸ் குழுவினர், மாநாடு நடத்த த.வெ.க.,வினர் தேர்வு செய்திருந்த இடத்தை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடு, மாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்டு, விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ், கடந்த 2ல் அக்கட்சி நிர்வாகிக்கு நோட்டீஸ் வழங்கினார்.போலீசாரின் நோட்டீசிற்கு உரிய விளக்கத்துடன் கூடிய கடிதத்தை, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷை நேற்று சந்தித்து அளித்தனர். இது குறித்து, டி.எஸ்.பி., சுரேஷ் கூறுகையில், “உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, த.வெ.,க.,வினருக்கு உரிய பதில் தரப்படும்,” என்றார்.விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதம், விழுப்புரம் எஸ்.பி., மூலம், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
செப் 07, 2024 13:52

அமெரிக்காவிலிருந்து ஏ.ஐ. மூலமாக அனுமதி வழங்குவார் தமிழக முதல்வர்


T.sthivinayagam
செப் 07, 2024 10:54

வாகை மலர் மலரந்தேதீரும்


Bhaskaran
செப் 07, 2024 09:51

அல்லக்கை அதிகாரிகள் ஆளும்கட்சியின் ஜால்ராக்கள்


RAMAKRISHNAN NATESAN
செப் 07, 2024 09:18

டி டீம் என்பதால் அனுமதி நிச்சயம் உண்டு ..... பி டீம் அதிமுக, சி டீம் நாம் தமிழர் .....


vbs manian
செப் 07, 2024 09:17

அனாவசிய இழுத்தடிப்பு. நீதிமன்றம் செல்ல வேண்டும்.


tmranganathan
செப் 07, 2024 08:08

இதே ஹிமுக மகாநாடு என்றல் Tiruchi மந்திரி தானே அனுமதி வழங்கி மாநாட்டை நடுத்தவூர் போலீஸ் பூனை போல கண்மூடிக்கொள்வார்கள். சமூகநீதியின் கோட்பாடு.


Lion Drsekar
செப் 07, 2024 08:03

நாடகமே உலகம் என்ற சான்றோர்கள் வாக்கு என்றைக்குமே வீண்போனது இல்லை, ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குடும்பம் இரசிகர்கள் அல்லது தொண்டர்களை நம்பி நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெறும்போது , அதைப்பார்த்து பொறாமைப்படாமல் , பறம்பேசாமல் இருக்க வாழவைத்தவர்களை , வாழவைக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும் , பல புகைப்படங்கள் வெளிவந்தன இரசிகர்கள் , தொண்டர்களின் வீட்டு வாசலில் கிழித்த உடைகள் வெய்யலில் உலர்த்தப்பட்ட நிலையில், இவர்களால் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வீட்டு மதில் சுவர் சிறைச்சாலைபோல் மிக உயரமாக இருக்கும் நிலையில் ,.....? பொது மக்கள் தேவைக்கு வருபவவர்கள் ஜாதி, மத , மொழிக்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு நடந்துகொண்டால் தற்போது நரகமாக இருக்கும் இந்த நிலை மாறி சொர்கத்தை இங்கேயே பார்க்கலாம், இப்படி நடந்து கொண்டால் மாநாடு நடத்தாமலேயே மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள், வந்தே மாதரம்


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 07, 2024 10:29

கமல் மாதிரியே புரியாம பேசுறீங்க! இதுல டாக்டர்னு வேற போட்டுக்கிற நீ பிரிக்ரிப்ஷன்ல புரியாம எழுதுற மாதிரியே இதுலயும் எழுதியிருக்க..


Kasimani Baskaran
செப் 07, 2024 07:46

கிளைக்கட்சி என்பதால் கார் பந்தயத்தின் பொழுது பொது மக்களுக்கு தொல்லை கொடுக்காமல் மவுண்ட் ரோட்டை மறித்தது போல இன்னொரு முறை மறித்துக்கூட மாநாடு நடக்க அனுமதிப்பார்கள். தீம்க்காவா... கொக்கா


கோவிந்தராசு
செப் 07, 2024 07:32

காணம போயிறும்


G Mahalingam
செப் 07, 2024 07:22

திமுக தலைவர்கள் ஜனநாயக சமூக நீதி பற்றி பேசுவார்கள் ஆனால் செயலில் சத்தியமாக இல்லை. இனி திமுக ஆட்சியில் ஒருவர் படம் எடுத்து திரையிடுவதில் பிரச்சினை. கட்சி ஆரம்பிப்பது பிரச்சினை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை