உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்கள் மீது வன்மம் காட்டும் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு வருகிறார்: மதுரை பிரசாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தமிழர்கள் மீது வன்மம் காட்டும் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு வருகிறார்: மதுரை பிரசாரத்தில் ஸ்டாலின் கேள்வி

மதுரை: ''10 ஆண்டுகளாக தமிழர்களை மதிக்காத, வளர்சித்திட்டங்களை செயல்படுத்தாமல் வஞ்சித்து தமிழர்கள் மீது வன்மம் காட்டும் பிரதமர் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு இங்கே வருகிறார்'' என மதுரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மதுரை மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன், சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தி ஆகியோரை ஆதரித்து மதுரை பாண்டி கோயில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன், தியாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரைநகர் செயலாளர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் ஸ்டாலின் பேசியதாவது:அடுத்து வரும் பிரதமர் 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பவராக, சமூக நீதி மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஜனநாயகம், அரசியல் சட்டம், மதசார்பின்மையை மதிக்கும் பிரதமர் நமக்கு வேண்டும். தமிழகத்தின் மீது உண்மையான பாசம் கொண்டவராக இருக்க வேண்டும்.தற்போதைய பிரதமர் மோடி தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்து கொடுக்காதவர். வெள்ளப் பாதிப்பிற்கு வராமல் இன்று ஓட்டு கேட்டு தமிழகத்திற்கு வந்துள்ளார். எந்த முகத்துடன் இங்கு வருகிறார். பா.ஜ., ஆட்சியில் இல்லாத கேரளா, கர்நாடகா, டில்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறிவைத்து வஞ்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை ஐ.டி., சி.பி.ஐ., கவர்னர்களை வைத்து மிரட்டுகிறார்.பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் மோடி, பா.ஜ., எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது வாய் திறக்கவில்லை. மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தையும் மவுனமாக தான் மோடி வேடிக்கை பார்த்தார். இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ., ஆட்சி. நாட்டில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்துகிறார். அவரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

திட்டங்களை தடுத்தோமா

தமிழகத்திற்கான திட்டங்களை நாங்கள் தடுத்தோம் என பெரிய பொய் சொல்கிறார். சேது சமுத்திரத் திட்டம் முடக்கம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பா.ஜ., தடுத்த வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிடலாம். தற்போது ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை பா.ஜ., உருவாக்குகிறது. பேரிடர் நிதியைக்கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த நிதிக்குக் கூட, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 'பிச்சை' என சொல்லி ஏளனம் பேச வைக்கிறது மத்திய அரசு. ஆனால் ஐ.மு.கூட்டணியில் ரூ. 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது, ரூ. 65 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி,ரூ. 56,644 கோடியில் மேம்பாலங்கள்,நெசவுத் தொழிலுக்கு இருந்த 'சென்வாட்' வரி நீக்கம் என பெரிய பட்டியலே உள்ளது. மோடியால் இப்படி நிறைவேற்றிய திட்டங்களை சொல்ல முடியுமா.

பறவைகள் சரணாலயமா

தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழகம் பறவைகள் சரணாலயமா. தமிழர்கள் மீது அவருக்கு ஏன் இத்தனை வன்மம். நாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களா. உங்களால் எப்படி ஓட்டுக் கேட்டு வரமுடிகிறது. மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கு, சிவகங்கையில் நாகரீகத்தின் தொட்டிலாக இருக்கும் கீழடி உள்ளிட்ட திட்டங்களை நிதிநெருக்கடியிலும் செய்துள்ளோம்.மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குதான் நாங்கள் எதிரி. மதத்திற்கு எதிரிகள் அல்ல.நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் ஹிந்து சமய அறநிலையத்துறை விழாக்களில் தான் அதிகம் பங்கேற்றேன். பதவிக்கு வந்து 1069 நாட்களில் 1556 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். ரூ.6 ஆயிரத்து 82 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.1250 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய தலா ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட திட்டங்களை சொல்லுவேன். மக்களைப் பண்படுத்தத்தான் ஆன்மிகத்தைப் பயன்படுத்த வேண்டும். பா.ஜ., மக்களைப் பிளவுபடுத்த பயன்படுத்துகிறது.நாட்டை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் நடைபோட பல்வேறு வாக்குறுதிகளை காங்., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதில் தி.மு.க., கூறிய வாக்குறுதிகளும் எதிரொலித்துள்ளது. ஆனால் தி.மு.க., இமேஜை பாதிக்கும் வகையில் வடமாநிலங்களில் பா.ஜ., பிரசாரம் செய்கிறது.

பா.ஜ.,'பி' டீம் பழனிசாமி

தமிழகத்திற்கு வந்தால் 'வணக்கம். எனக்கு இட்லி பொங்கல் பிடிக்கும். தமிழ் பிடிக்கும்' என கூறி தமிழுக்கு மோடி துரோகம் செய்கிறார். கவர்னர் ரவியை வைத்து கால்டுவெல், ஜி.யு.போப்பை விமர்சித்து தமிழகத்தில் விதண்டவாதம் பேச வைக்கிறார். தமிழக விரோத செயல்களை செய்துவிட்டு வாயால் வடை சுடுகிறார். தமிழகத்திற்கு பா.ஜ., இழைத்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி.பா.ஜ., வின் 'பி' டீம் ஆக இருந்து ஓட்டுக்களை பிரிக்கிறார். துரோகத்தின் உருவம், முதுகெலும்பு இல்லாதவர். பதவியை பெற்று சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தவர். பா.ஜ.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். அவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கே எதிரி. அ.தி.மு.க.,வையும், தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.,வையும் இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhakt
ஏப் 10, 2024 20:47

தமிழர்கள் மீது வன்மம் காட்ட வில்லை தீய முக கம்பெனி ஓங்கோல் ஓனர் குடும்பத்தின் மேல் தான் வன்மம் காட்டுகிறார்


Dharmavaan
ஏப் 10, 2024 18:16

மோடி தமிழரை போற்றுகிறார் உன்னைப்போல் திருடனை நம்பவில்லை அவர் கொடுத்த ௫௦௦௦ கோடி கணக்கு எங்கே


K Subramanian
ஏப் 10, 2024 16:57

Very aptly put Gopinath He is wishing telungu new year but avoids tamils A person with responsible position should not be doing this


Bala
ஏப் 10, 2024 13:55

ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்து, தமிழ்நாட்டின் மூலவளங்களையும் தமிழ்மொழியையும் அழித்த பிழைக்க வந்த திருட்டுக் கொலைகாரத் தெலுங்குக் கும்பல்களை விட மோடி மேல் அழியும் காலம் வந்துவிட்டது இந்த திருட்டுப் போதைக் கும்பல்கள் தெலுங்குப் போதைமன்னனின் கணிதம் / புள்ளிகள்


Sridhar
ஏப் 10, 2024 12:29

திருட்டு கும்பல் என்னவேனும்னாலும் பேசிட்டுப்போங்க கேஜ்ரிவாலும் ஜெயிலுக்கு போவரத்துக்கு முன்னாடி இப்படித்தான் உளறிட்டு இருந்தான் உள்ளவச்சு நல்ல கவனிக்கும்போது எல்லாம் சரியாயிடும்


A1Suresh
ஏப் 10, 2024 12:03

ஆங்கிலேயர்கள் ஜியூபோப், ராபர்ட் கால்டுவெல் போன்ற பல பாதிரியார்களை உதவியாகக் கொண்டு வடமொழி மீதும், பிராமணர்கள் மீதும், சனாதன தர்மத்தின் மீதும் பொய்யாக பல நூல்களை எழுத வைத்தனர் பொய்யாக நூறு ஆண்டுகாலங்களாக பிரசாரம் செய்தனர் ஆபிரஹாம் பண்டிதர், தேவநேய பாவாணர் போன்றவர்களும் பல பிராமண வெறுப்பு நூல்களை எழுதியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக திராவிட கழகமும் ஆண்டுகளாக வெறுப்புணர்ச்சியை பரப்புகின்றனர் எனவே பெருவாரியான தமிழக மக்களும் இதை நம்புகின்றனர் இந்த போக்கு மாற காலம் தான் முடிவு செய்யும் பஞ்சாப்பிலும் ஆங்கிலேயர்கள் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை விதைத்தனர் பாகிஸ்தான்-பங்களாதேஷ் பிரியவும் அவர்களே காரணமாயினர் எனவே எல்லை மாநிலங்கள் என்னும் காரணத்தால் இது சாத்தியமாகிறது


A1Suresh
ஏப் 10, 2024 11:55

உங்கள் அகராதியில் வன்மம் என்பதன் பொருள் யாது?


Gopinath A
ஏப் 10, 2024 10:52

நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்துக்களிடம் வருகிறீர்கள் என்று சொன்னால் மக்களுக்கு புரியும் தி மு க தமிழ் நாட்டின் அழுக்கு ஜாதிக்கொரு கட்சி மதத்துக்கொரு கட்சி கேட்டால் சமத்துவம் பேசுறீங்க


GoK
ஏப் 10, 2024 10:48

அவருக்கு ஒரே முகம்தான்


PR Makudeswaran
ஏப் 10, 2024 09:54

இந்திய ஒரு குடியரசு நாடு எல்லோருக்கும் ஒரு சட்டம் தான் அதில் எப்படி உங்களுக்கு மட்டும் ஒரு சட்டம்? எந்த முகத்தை வைத்து கேள்வி? அறிவு? சிந்திக்கும் திறன்? நீட் விலக்கு? கேவலமாக இல்லை?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி