உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  100% பணி முடிப்பு ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு

 100% பணி முடிப்பு ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு

சென்னை: எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, 2,488 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முடித்துள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. இப்பணியில், 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளனர். இவர்களில், 2,488 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது ஓட்டுச்சாவடி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம், சேகரிப்பு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் பணிகளை, 100 சதவீதம் முடித்துள்ளனர். இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டும் வகையில், ஓட்டுச்சாவடி அலுவலர்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள் கவுரவித்துள்ளனர். இது, வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும், நம்பகத்தன்மையையும் பாதுகாப்பதில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆற்றும் முக்கிய பங்கையும், தேர்தல் செயல் முறைக்கு அளித்த சிறப்பான பங்களிப்பையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ