உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமாதான திட்டத்தில் கிடைத்தது ரூ.160 கோடி

சமாதான திட்டத்தில் கிடைத்தது ரூ.160 கோடி

சென்னை:தமிழக அரசின் வணிக வரித்துறை, வணிகர்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்க, சமாதான திட்டத்தை 2023 அக்., 16ல் துவக்கியது. அத்திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு கீழ் இருந்த வரி நிலுவை முழுதும் தள்ளுபடி செய்யப்பட்டது.'சமாதான திட்டம், 2024 பிப்., 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்' என, வணிக வரித்துறை அறிவித்தது. அதன்படி, அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, 160 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் நீட்டிப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ